மோடி கிட்ட விஜய் சொன்ன விஷயம்.. 20 நிமிட சந்திப்பு.. ஆளுநர் அர்லேக்கர் நியமனத்தில் திடீர் ட்விஸ்ட்

  • சென்னை: சென்னை: தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேக்கர் நியமிக்கப்பட்டதன் பின்னணியில், முதல்வர் விஜய் - பிரதமர் மோடி இடையிலான தனிப்பட்ட சந்திப்பு முக்கிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்ததாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. சென்னை ஏர்போர்ட்டில் 20 நிமிடங்கள் நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது.. அர்லேக்கர் நியமனம் குறித்து விஜய் சொன்னது என்ன? இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

    Advertisement

    கேரளாவின் முழு நேர ஆளுநர் அர்லேக்கர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் கூடுதலாக கவனித்து வந்த நிலையில், கேரளாவிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் விஜய்யின் விருப்பத்தை அறிந்தே இந்த முடிவை பிரதமர் எடுத்தார் என்கிறது கோட்டை வட்டாராம்.

    Advertisement


    விஜய் - மோடி சந்திப்பு

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடந்த11-ந்தேதி சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி! ஆளுநர் அர்லேக்கரும், முதல்வர் விஜய்யும் சென்னை ஏர்போர்ட்டில் மோடியை வரவேற்றனர். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு டெல்லிக்கு கிளம்பும்போது மோடியை வழியனுப்பி வைக்கவும் முதல்வர் விஜய் சென்றிருந்தார்.

    அப்படி வழி அனுப்பி வைக்கும்போது சென்னை ஏர்போர்ட்டில் முதல்வர் விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் 20 நிமிடங்கள் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தாராம்.. அப்போது, ,இந்த ஒரு நாள் பயணம் குறித்து மகிழ்ச்சியும் நன்றியையும் மோடிக்கு தெரிவித்துக்கொண்டாராம் விஜய்.

    கவர்னர் - அர்லேக்கர்

    அதுமட்டுமல்ல இந்த சந்திப்பின் போது, "அர்லேக்கரை முழு நேர கவர்னராக நியமிக்கவிருக்கிறோம். இதில் உங்களுக்கு ஏதாவது கருத்துகள் இருக்கிறதா?" என மோடி கேட்டாராம்.. அதற்கு விஜய், தமக்கு எந்த கருத்தும் இதில் இல்லை, அரசுக்கு அவரது ஆலோசனை பல விஷயங்களில் எங்களுக்கு உதவியிருக்கிறது" என்று பதிலளித்தாராம் விஜய்.

    அதேபோல, கடந்த மாதம் டெல்லி சென்றிருந்த அர்லேக்கர், மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். அப்போது, தமிழகத்தையும் கேரளாவையும் ஒரு சேர கவனிப்பது கடினமாக இருக்கிறது. ஏதாவது ஒரு பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்கலாம் என்று கோரிக்கை வைத்திருந்திருக்கிறார்.

    Advertisement

    உங்கள் சாய்ஸ் என்ற அமித்ஷா

    உடனே அமித்ஷா, "எந்த மாநிலம் என்பது உங்களுடைய சாய்ஸ் தான்" என்று சொல்லவும், உடனே தமிழகத்தை அர்லேக்கர் தேர்ந்தெடுத்தாராம்.

    இந்த கோரிக்கை நீண்ட நாட்களாகவே கிடப்பில் இருந்த நிலையில், சென்னை வந்துவிட்டு டெல்லி திரும்பிய மோடி, தமிழகத்திற்கான முழு நேர ஆளுநராக அர்லேக் கரை நியமிக்கும் முடிவை எடுத்தார் என்று தலைமைச் செயலக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த தகவல்களையெல்லாம் கோட்டை வட்டாரங்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளன..

    ஆக, அர்லேக்கரின் நியமனத்தில் அவரது விருப்பம் ஒருபுறம், தமிழக அரசின் கருத்து மறுபுறம் என இரு விஷயங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.. இந்த நியமனத்தின் பின்னணியில் நடந்த ஆலோசனைகள் குறித்த கூடுதல் தகவல்கள் இனி வெளியாகுமா என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்..!!

    Advertisement

    - நமது சிறப்பு நிருபர் எழில்