அடுத்த பிரதமர்? தேசிய அரசியலில் விஜய்.. தவெக அமைச்சர்கள் பேச்சின் பின்னணி.. அதிருப்தியில் காங்கிரஸ்

  • சென்னை: இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் என்று சீனியர் அமைச்சரான செங்கோட்டையன் தொடங்கி தவெகவின் அத்தனை நிர்வாகிகளும் பேசி வருவது காங்கிரஸ் கட்சியை கொதிப்படைய வைத்துள்ளது. இதனிடையே கேரளாவில் தவெகவை தொடங்க விஜய் ஆலோசித்து வரும் நிலையில், விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் தெலங்கானா ரக்‌ஷன சேனா கட்சித் தலைவர் கவிதாவையும் சந்தித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெகவை தொடங்கி வெறும் 2 ஆண்டுகளில் விஜய் ஆட்சியை பிடித்துள்ளார். இதனால் தவெகவின் விஜய்யை அடுத்த பிரதமர் என்று புகழ்ந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் வைத்து கொண்டே விஜய்யை பிரதமர் என்று பேசி வருவது, கதர் கட்சியினர் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இதனை காங்கிரஸ் கட்சி விளையாட்டாகவே பார்த்தது.

    Advertisement

    ஆனால் சீனியர் அமைச்சரான செங்கோட்டையன் தொடங்கி தவெகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் விஜய்யை அடுத்த பிரதமர் என்று பேசத் தொடங்கி இருக்கின்றனர். இன்னொரு பக்கம் வட மாநிலங்களில் முதல்வர் விஜய்யின் உத்தரவுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் கொண்டு ரீல்ஸ் பதிவிடப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொய் செய்திகளை வைத்தே ரீல்ஸ் வந்தாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் தெலங்கானா ரக்‌ஷன சேனா கட்சியின் தலைவர் கவிதாவை விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் சந்தித்தார். விஜய்யின் வீட்டிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது. மறுபக்கம் கேரளாவில் தவெகவை தொடங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாஜக முன்னாள் நிர்வாகி தேவன் இதற்காக செப்டம்பர் 10ஆம் தேதி விஜய்யை சந்திக்க உள்ளார்.

    Advertisement

    ஏற்கனவே ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் விஜய்க்கு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. புதுச்சேரியிலும் புஸ்ஸி ஆனந்த் மூலமாக முதல்வர் ரங்கசாமி தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பீகாரில் ஜன் சுராஜ் கட்சி மீண்டும் உயிர் பெற தொடங்கி இருக்கிறது. பிரசாந்த் கிஷோரும் விஜய்யுடன் நட்பில் இருந்தவர் தான்.

    அண்மையில் விஜய்யின் 100 நாள் ஆட்சியின் சாதனைகள் பல்வேறு மாநில நாளிதழ்களிலும் விளம்பரமாக கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் லோக்சபா தேர்தலின் போது தவெக தனித்து கூட்டணி அமைத்து 40 முதல் 60 இடங்களை கைப்பற்றினால், அது தேசிய அளவில் திரும்பி பார்க்கப்படும். இன்னும் சொல்லப் போனால், அது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறும்.

    Advertisement

    இதனால் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே ராகுல் காந்தியிடம் இதுதொடர்பாக ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தவெக தேசிய அளவில் பிரபலமான கட்சியாக மாறும் என்பதோடு, விஜய்யின் செல்வாக்கு அதிகளவில் உயரும். கேரளாவில் விஜய் கட்சியை தொடங்கிய பின், அவரின் தேசிய அரசியல் ஆட்டம் தொடங்கும் என்று தவெகவினர் பேசி வருகின்றனர்.

    English Summary

    Vijay National Ambitions Triggers Congress, TVK Target Kerala Entry Amid High Profile Meetings