எடப்பாடிக்கு ரெடியாகுது ஆப்பு.. ஜெ. பாணியைக் கையிலெடுக்கும் விஜய்! அடுத்த தேமுதிக ஆகும் அதிமுக? பரபர

  • சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த கட்ட நெருக்கடியை கொடுக்க ரெடி ஆகி வருகிறது எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம் தரப்பு. 2011-2016 ஆட்சிக் காலத்தில் விஜயகாந்த்-க்கு அதிமுக கொடுத்த அதே ட்ரீட்மென்டை தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் தரப் போகிறார்களாம். விஜயின் முழு சம்மதத்தோடு இந்த ஆபரேஷன் அரங்கேற போகிறது என்கின்றனர் அதிமுக அதிருப்தி கோஷ்டியினர். இதனால் எடப்பாடி தரப்பும் ஷாக்கில் இருக்கிறாராம்..

    Advertisement

    2026 சட்டமன்ற தேர்தல் வரலாறுகளை திருப்பி போட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் எந்த கட்சியும் ஆட்சியைப் பிடித்ததில்லை என்பதுதான் வரலாறு. ஆனால் அதனை மாற்றியது தமிழக வெற்றி கழகம்.

    Advertisement

    மேலும் கூட்டணியே இல்லாமல் தாங்கள் சந்தித்த முதல் தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்றது அந்த கட்சி. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தை பலமுறை ஆண்ட கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்த அதிமுக பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி

    குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போர் கொடி தூக்கி இருக்கின்றனர். ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் தாவி இருக்கின்றனர். இதற்கெல்லாம் விதை போட்டது சிவி சண்முகமும், எஸ் பி வேலுமணியும் தான். தேர்தலுக்கு முன்பு தவெக - கூட்டணி அமையாத நிலையில், தேர்தல் தோல்விக்கு பிறகாவது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எஸ்பி வேலுமணி சிவி சமூகத்தின் பேச்சை எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை.

    Advertisement

    அதிமுக

    இதை அடுத்து அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு உருவானது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். பின்னர் இடையே சமாதானம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வெடித்துள்ளது விவகாரம். சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில், மீண்டும் வேலுமணி தரப்பு விஜய் தரப்பைச் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2011-2016 ஆட்சிக் காலத்தில் விஜயகாந்த்-க்கு அதிமுக கொடுத்த அதே ட்ரீட்மென்டை தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் தர திட்டமிட்டுள்ளதாம் விஜய் தரப்பு.

    விஜயகாந்த்

    அதாவது, அதிமுக அதிருப்தி அணியினர் இனி தவெக ஆதரவு அணியாக செயல்படப் போகிறார்களாம். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். எதிர்பார்த்தபடி அந்த கூட்டணி மெகா வெற்றியைப் பெற்றது. ஜெயலலிதா முதல்வரான நிலையில், 29 தொகுதிகளில் வென்ற விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாகவே சென்றது.

    Advertisement

    ஜெயலலிதா

    இதற்கிடையே இடைத் தேர்தல் தொடர்பாக நடந்து விவாதத்தில் ஜெ-வி இடையே மோதல் வெடித்தது. அப்போது விஜயகாந்தின் நடவடிக்கைகள் ஆளும் தரப்பை கடும் கோபமடையச் செய்தது. ஆரம்பத்தில் இரு அணிகளுக்கும் நல்லறவு நீடித்து வந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் விஜயகாந்த் ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசினார். இதனால் ஜெயலலிதா கடும் கோபமடைந்தார். விஜயகாந்திடமிருந்து எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை எப்படியாவது பறிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த ஜெயலலிதா, அதற்குப் பயன்படுத்திய ஆயுதம்தான் 'தனி அணி' வியூகம்.

    தேமுதிக

    எப்படியாவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை அவரிடம் இருந்து பறிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அதிமுக அதற்காக அவர்கள் பயன்படுத்தியது தான் அதிருப்தி கோஷ்டி தேமுதிகவைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் விஜய்காந்த் இடமிருந்து விலகினர். ஆனால் நேரடியாக கட்சியில் சேராமல் தங்கள் தொகுதி மக்கள் தேவை குறித்து மனுக்களை அளிப்பதாக சொல்லி ஜெயலலிதாவுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்து வெளியிட தொடங்கினர்.

    Advertisement

    எதிர்க்கட்சித் தலைவர்

    அடுத்து யார் செல்வார் என்ற கேள்வி தேமுதிக வட்டாரங்களில் எதிரொலிக்க தொடங்கியது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சட்டசபையில் விஜயகாந்துக்கு எதிராகவே அவர்கள் பேசினார். ஆனால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கினால் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவி போய்விடும் என்பதால் விஜயகாந்த் அமைதியாகவே இருந்தார். ஆனாலும் தைரியம் இருந்தால் எங்களை கட்சியில் இருந்து நீக்குங்கள் என சவால் விட்டனர்.

    சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி

    ஆனாலும் கடைசி வரை அவர்களை விஜயகாந்த் நீக்கவில்லை. ஒரு வழியாக கடைசி நேரத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த். அதற்குப் பிறகு அரசியலில் அவரது சரிவு தொடங்கியது. தற்போது அதே மாதிரியான பாணியை எடப்பாடி பழனிச்சாமிக்கும் செக் வைக்க விஜய் தரப்பு முடிவு செய்து, சிவி சண்முகம் வேலுமணி அணியை தயார் செய்து வருகிறதாம்.

    Advertisement

    விஜய்

    சட்டமன்றத்தில் எடப்பாடிக்கு எதிராக இவர்களை பேச வைப்பது தான் விஜய்யின் திட்டம். ஏற்கனவே இதே திட்டத்தோடு விஜய் சண்முகம் தரப்பு தொடர்பு கொண்ட போது, அப்போதைக்கு வேண்டாம் என சொல்லிவிட்டார். ஆனால் விஜய் மீது எடப்பாடி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இப்போதைக்கு இதே பாணியை கடைபிடிப்பது தான் சரி என்பதை உணர்ந்த விஜய் அதற்கு ஓகே சொல்லி விட்டாராம். இதன் மூலம் எடப்பாடி குறித்து கட்சியிலும் பொதுவெளியிலும் அதிருப்தி வரும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் ப்ளான். இதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் தமிழக அரசியலில் அடுத்து ஒரு திருப்பம் ஏற்படும் என்கின்றனர் அதிருப்தி கோஷ்டியினர்.

    English Summary

    AIADMK dissident leaders may back Vijay as internal tensions grow, with a strategy reportedly targeting Edappadi Palaniswami.