3 அமைச்சர்கள் பதவி பறிப்பு? இடைத்தேர்தல் ரிசல்ட் வந்ததும் விஜய் எடுக்க போகும் அதிரடி முடிவு

  • சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என நீண்ட நாட்களாகவே தகவல் பரவி வந்த நிலையில் தற்போது, இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பெண் அமைச்சர் ஒருவரது பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பெண் அமைச்சர் மட்டும் இன்றி மேலும் இருவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

    Advertisement

    சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனவும், இதனை அதன் துறை செயலர்கள் வாயிலாக முதல்வர் விஜய் தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைச்சரவையில் மாற்றம் குறித்த அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

    Advertisement

    2 தொகுதியில் இடைத்தேர்தல்

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு ஆட்சியை அமைத்தது. இதில் முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்களும், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

    பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்.. வெற்றி பெற்ற பிறகு 2வது முறையாக விசிட்!
    Advertisement

    இதற்கிடையே அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல், சத்தியபாமா, சி விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 6 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். முதல்வர் விஜய்யும் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாகின. ஆனால், ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, 5 தொகுதிகளைத் தவிர மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மட்டும் நேற்று இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.

    தனி மெஜாரிட்டியை நோக்கி

    இதில் அதிமுக, திமுக வெற்றி பெற்றால், அவர்களது எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கும். ஆனால், தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து பெற வேண்டும் என கட்டாயம் இருக்காது. தனி மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களை நோக்கி தவெக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுவதால் இரு தொகுதிகளிலும் தவெக வென்றாக வேண்டும் என கருதுகிறது. இந்த இரண்டு தொகுதியின் வெற்றி அவர்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும்.

    Advertisement
    ஆகாயத்தில் பறக்கும் அரிசி விலை.. விஜய் காதுக்கு இந்த விஷயம் எட்டவில்லையோ! கொந்தளிக்கும் பெ.சண்முகம்

    ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன மேலும் சில எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறி வருகிறார். இதனால் அடுத்தடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகள் தயவு இன்றி ஆட்சியை 5 ஆண்டுகள் முழுமையாக முடிக்க தவெக எண்ணுவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் தவெக தோற்றுவிட்டால் அதிமுகவில் இருந்து வேறு யாரும் இனி ராஜினாமா செய்ய மாட்டார்கள்.

    3 அமைச்சர்கள் பதவி பறிக்கப்படுவதாக..

    அவ்வளவு தான் விஜய்யின் செல்வாக்கு முடிந்துவிட்டது. இனி விஜய் எவ்வளவு தான் பிரசாரம் செய்தாலும் வெற்றி பெற முடியாது, ஏற்கனவே ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி எழுப்பும் கூட்டணி கட்சிகளும் மேலும் பாடாய் படுத்த தொடங்கிவிடுவார்கள் என தவெக கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே தான் ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட பரவாயில்லை, மெஜாரிட்டி மட்டும் இருந்துவிட்டால் போதும் என தவெக கணக்கு போடுகிறதாம். அப்படி தான் தற்போது இடைத்தேர்தலை வைத்து அமைச்சரவையை மாற்றம் செய்யவும் தவெக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement
    மதுராந்தகம், தாராபுரம் மாதிரி ஆகக்கூடாது! கட்சி தாவியவர்களுக்கு இனி சீட் இல்லை? விஜய் முக்கிய முடிவு

    அதாவது, இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கவும், ஏற்கனவே இருக்கிற ஒரு பெண் அமைச்சர் பதவியை பறிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளாராம். தற்போது இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால் மேலும் சில எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தங்கள் பக்கம் வரலாம் என தவெக நினைப்பதாக கூறப்படுகிறது.

    தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அமைச்சரின் செயல்பாடுகளில் முதல்வர் விஜய்க்கு திருப்தியில்லை எனவும், மேலும் இரு அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை என அதன் துறை செயலாளர்கள் கூறியதாகவும், எனவே பெண் அமைச்சர் உள்பட 3 பேரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இடைத்தேர்தல் முடிந்ததும், வரும் 11 ஆம் தேதி வடபழனி மெட்ரோ திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அதனை தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தவெக பெண் அமைச்சர்கள்

    தற்போது தவெக அமைச்சரவையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி, பால் மற்றும் பால்வள மேம்பாட்டுதுறை அமைச்சர் விஜயலட்சுமி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகிய 4 பேர் உள்ளனர்.

    English Summary

    Vijay plans cabinet reshuffle: While rumors of a reshuffle in the Tamil Nadu cabinet have been circulating for quite some time, reports have now emerged that a female minister is set to lose her post following the by-election results. It has also come to light that, in addition to the female minister, two other ministers are likely to be removed from their positions.