பிரதமர் வேட்பாளர் ரேஸில் விஜய்.. இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பு.. பிரேமலதா விஜயகாந்த் பதில்

  • சென்னை: பிரதமர் வேட்பாளராக மோடி, ராகுல் காந்தி வரிசையில் தமிழக முதல்வர் விஜய் உள்ளதாக வெளியான கருத்துக் கணிப்பு தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் அடுத்தக் கட்டம் செல்வதற்கான உரிமை இருப்பதாக கூறிய பிரேமலதா விஜயகாந்த், யாருக்கு என்ன தலையில் எழுதி இருக்கிறதோ, அது நடக்கும் என்பதே என் கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்மையில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் சார்பாக Mood of the Nation கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நாட்டில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை Mood of the Nation சர்வேயை இந்த நிறுவனங்கள் வெளியிடும். அதன்படி ஜனவரி மாதத்திற்கு பின், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை மீண்டும் Mood of the Nation சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறின.

    Advertisement

    நாடு முழுவதும் உள்ள 25,184 பேரிடம் நேரடியாகவும், 6 மாதங்களாக எடுக்கப்பட்ட 91,795 பேட்டிகளின் அடிப்ப்டையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 48.7% பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேபோல் ராகுல் காந்தி 27.1% ஆதரவுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

    தொடர்ந்து 9.2% ஆதரவுடன் விஜய் 3வது இடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற 3 மாதங்களிலேயே அடுத்த பிரதமர் ரேஸில் விஜய் இணைந்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியின் தலைவராக ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் விஜய் இருக்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி விஜய் 3வது இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு கடந்த 3 மாதங்களில் தவெக சார்பாக விஜய் தளபதி என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் ரீல்ஸ் வெளியிடப்பட்டது. அதில் பெரும்பாலான ரீல்ஸ் போலி செய்திகள் அடிப்படையிலானவை தான்.

    இருப்பினும் தவெக தேசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவாகி வருவதாக பார்க்கப்படுகிறது. அடுத்த பிரதமருக்கான ரேஸில் விஜய் இருப்பது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு, நம்பிக்கை இருக்கிறது.

    Advertisement

    அடுத்தக் கட்டம் செல்வதற்கான உரிமையும் இருக்கிறது. விஜய் பற்றி எந்தவொரு கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு. யாருக்கு என்ன தலையில் எழுதி இருக்கிறதோ, அது நடக்கும் என்பதே என்னுடைய கருத்து என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Vijay: Premalatha Vijayakanth Reacts to Survey Projecting CM Vijay in PM Candidate Race Alongside Modi and Rahul Gandhi