விஜய் கொடுத்த வாக்குறுதி முழு தோல்வி.. புலம்பும் கிராமப்புற மக்கள்! தவெக அரசு கண்டுகொள்ளுமா?

  • சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கிராமப்புற மக்களுக்கு 150 நாட்கள் வரை வேலை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், தற்போது வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே வேலை கிடைப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    தமிழகத்தில் புதிய VB-G RAM G திட்டத்தின் கீழ் அதன் முதல் 91 நாட்களில் ஊரகத் தொழிலாளர்களுக்கு சராசரியாக வெறும் 10 நாட்கள் மட்டுமெ வேலை வழங்கப்பட்டிருப்பது. முதலமைச்சர் விஜய் கொடுத்த 150 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் படி வேலை வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    Advertisement

    தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் பாதிப்பு

    கடந்த ஜூலை 1ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 4 அல்லது 5 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே மக்களுக்கு வேலை கிடைக்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் வெறும் 5 அல்லது 6 நாட்கள் மட்டுமே வேலை பெற்றிருக்கின்றனர். ஒவ்வொரு வொர்க்கிங் சைட்டிலும், அனுமதிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 50லிருந்து 20 ஆக குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சுமார் 80 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    செஞ்ச வேலைக்கு சம்பளம் இல்லை

    இதே நிலை தொடர்ந்தால், தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 30 நாட்களுக்கும் குறைவான வேலையே கிடைக்கும் என ஊரக வளர்ச்சித் துறை வட்டாராங்கள் கவலை தெரிவித்துள்ளன. வேலைப் பற்றாக்குறை மட்டுமின்றி, தமிழகத்தின் பல ஊராட்சிகளில் தொழிலாளர்களுக்கு கடந்த 3-4 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

    Advertisement

    மதுராந்தகம் அருகே உள்ள அபிராமபுரம் கிராம தொழிலாளர்கள் 4 வாரங்களாக ஊதியத்திற்காக காத்திருக்கின்றனர் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை வெளியிட்டிருக்கிறது. கூடுதல் நாட்களுக்கு வேலை வழங்க கோரி செப்.30 அன்று சிபிஎம் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டிருந்தது.

    50 நாட்கள் வேலையாம்

    இந்த திட்டம் புதிய விதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டதால் ஆரம்பகட்ட சிக்கல்கள் இருப்பதாக உயர் அதிகாரிகள் கூறியிருக்கினற்னர். நிலுவையில் உள்ள ஊதியங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் இந்த நிதியாண்டின் இறுதிக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 50 நாட்கள் வரை வேலை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியிருக்கிறது.

    Advertisement

    வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்?

    ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை கொடுக்கப்படும் என்று சொன்னார்களே! எப்போது வேலை கிடைக்கும் என்று கிராமப்புற தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கிராமங்களில் மக்களின் வருமானம் உயரும்போதுதான் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும் என்று.. பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துதான் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வரப்பட்டது. இது பாஜக ஆட்சியில் VB-G RAM G என்று பெயர் மாற்றப்பட்டது.

    இந்த மாற்றத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலை கிடைக்கும் என்று மத்திய அரசு சொன்னது. அதேபோலத்தான் விஜய்யும், நான் முதலமைச்சரானால் 150 நாட்களுக்கு வேலை கொடுப்பேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் இரண்டுமே நடக்காததால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

    English Summary

    Vijay: During the election campaign, Chief Minister Vijay had promised to provide up to 150 days of employment to rural residents if his party came to power; however, workers have now expressed distress that they are receiving work for only 10 days.