என்னென்ன நடக்குது பாருங்க..கர்நாடகா மேல் புகார்களை அடுக்கிய விஜய்! அமைதியாய் கேட்ட அமித்ஷா! அடுத்து?

  • சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31வது தென் மாநில முதல்வர்கள் கூட்டம் சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெருகிறது. அந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் காவேரி விவகாரத்தை எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் விஜய் பேச இருப்பதாக சொல்கின்றனர்.

    Advertisement

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள் ஆகிய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இணைந்த தென் மாநில ஒருங்கிணைப்பு குழு செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் சந்தித்து பேசுவது வழக்கம். வருடா வருடம் வழக்கமாக நடைபெறும் இந்த முதல்வர் சந்திப்பு கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை.

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு

    இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென் மாநில முதல்வர்கள் சந்திப்பு கூட்டம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோபாலத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த தென் மாநில முதல்வர் சந்திப்பு கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா போன்ற 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மாநிலத்தின் முக்கிய அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்று உள்ளனர்.

    Advertisement

    அமித் ஷா

    இந்த தென் மாநில முதல்வர்கள் சந்திப்பு கூட்டத்தில் குறிப்பாக மாநிலங்களில் உள்ள பிரச்சனைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை குறித்து முக்கியமாக ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவே உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல முதலமைச்சர்கள் நட்சத்திர விடுதிக்கு வந்து விட்டனர். நேற்று இரவே உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய்யும் சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.

    நதிநீர் பிரச்சனை

    தற்போது நடைபெறும் தென் மாநில முதல்வர் சந்திப்பு கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை குறித்தும் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சனைகளை குறித்தும் பேசி அதற்கு ஒரு முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முதல்வர் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பில் உள்ளது. குறிப்பாக சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    Advertisement

    காவிரி நீர்

    இந்த தென் மாநில முதல்வர் சந்திப்பு கூட்டம் முடிந்த பிறகு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளுக்கும் மாநிலங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரமும், காவிரி நீர் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக அங்கு நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளாராம்.

    மேகதாது அணை

    மேலும் கர்நாடக உயர் அதிகாரிகளிடமும், முதல்வர் டிகே சிவக்குமாரிடமும் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனியாக பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

    English Summary

    Tamil Nadu CM Vijay is likely to raise Cauvery water sharing, Mekedatu dam and Tamil deaths in Karnataka at the southern CMs meeting.