அரசு மதிப்பீட்டை விட 32% குறைவு.. வெறும் ரூ.3.78 கோடி! முதல்வர் அலுவலக டெண்டர் எடுத்த ராசி பில்டர்ஸ்

  • சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் முதல்வர் அலுவலக புதுப்பிப்பு பணிகளுக்கான டெண்டர் ராசி பிஸ்டர்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.5.54 கோடிக்கு டெண்டர் விடப்பட்ட சூழலில், 5 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. அதில் ரூ.3.78 கோடிக்கு டெண்டர் கோரிய ராசி பில்டர்ஸ் வசம் டெண்டர் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முதல்வர் விஜய் கடல் பார்த்து உயர்ந்த இடமான 10வது மாடியில் இருக்க வேண்டும் என்று அவரின் ஆஸ்தான ஜோசியர் ரிக்கி ராதன் பண்டிட் அறிவுறுத்தியதால், இந்த மாற்றம் நடப்பதாக சொல்லப்பட்டது.

    Advertisement

    ஜூலை மாத இறுதியிலேயே நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதுப்பிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் எந்தவித டெண்டரும் வெளியிடப்படாமல் நாமக்கல் கவிஞர் மாளிகை புதுப்பிப்பு பணிகள் நடப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தன. அதேபோல் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்து வரும் பணிகளின் புகைப்படங்களும் வெளியாகின.

    ஆனால் தவெக அமைச்சர்கள், எந்தவித பணிகளும் நடக்கவில்லை என்று மறுத்தனர். இதன்பின் ஆகஸ்ட் மாத 3வது வாரத்தில் டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் பிளாக் 1 ரூ.2.41 கோடி, பிளாக் 2 ரூ.2.01 கோடி மற்றும் பிளாக் 3 ரூ.1.12 கோடி என்று மொத்தமாக ரூ.5.54 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.

    Advertisement

    அப்போது இந்த பணிகளை 3 மாதங்கள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல் பொதுப்பணித்துறையில் பதிவு செய்த ஒப்பந்தத்தாரர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப டெண்டரில் 5 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் யுடெக் இன்ஜினியரிங் நிறுவனம் தொடக்க நிலையிலேயே தகுதி இழப்பு செய்யப்பட்டது.

    இதன்பின் ராசி பிஸ்டர்ஸ், ஈஸ்வரி கன்ஸ்ட்ரன்ஷன்ஸ், ஸ்ரீ ராகவேந்திர பில்டர்ஸ், கியூப் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் போட்டியில் இருந்தன. இதில் ராசி பில்டர்ஸ் நிறுவனம் ரூ.3.78 கோடிக்கு டெண்டர் எடுத்துள்ளது. இது மதிப்பீட்டு தொகையை விடவும் 32% குறைவாக டெண்டர் கோரி போட்டியில் வென்றிருக்கிறது. இந்த ராசி பில்டர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக நல்லி சில்க்ஸ், மேனகா கார்ட்ஸ், எய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அனில் ரெட்டி ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vijay: Rasi Builders Wins Rs 3.78 Crore Tender for CM Office Renovation at Namakkal Kavingar Maaligai