தேசிய அரசியல் ஆசை.. பெரிய பிம்பத்தை உருவாக்க விரும்பும் விஜய்.. வடஇந்தியா மீம்ஸ்க்கு இதுதான் காரணமா!

  • சென்னை: கடந்த சில வாரங்களாகவே வட இந்தியாவில் முதல்வர் விஜய் தொடர்பாக வீடியோக்கள், மீம்ஸ் அதிகளவில் பரவி வருகிறது. அதேபோல் விஜய்யின் பேச்சுகள் பல்வேறு மொழிகளில் ஏஐ மூலமாக டப் செய்யப்பட்டு டிரெண்டாகி வருகின்றன. இதன் பின்னணியில் தவெகவின் அரசியல் வியூகம் இருப்பதாக விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் அணியும் ஷர்ட், பேண்ட், கூலிங் கிளாஸ், பெல்ட் வைத்து கூட ரீல்ஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக எந்தவித வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகுவதில்லை. ஆனால் விஜய்யின் பேச்சுகள் ரீலாக கட் செய்யப்பட்டு டிரெண்டாகி வருகின்றன. அதேபோல் வட மாநிலங்களிலும் விஜய்யின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    தளபதி விஜய் என்று வட மாநில மக்கள் சொல்வதாகவும், தவெக ஆட்சியில் கொண்டு வரப்படாத திட்டங்களை கூட மீமாக ஆங்கிலத்தில் வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் தான் பாலியல் வழக்கில் சிக்குவோரை 24 மணி நேரத்தில் தூக்கிலிடுவோம் என்று விஜய் உத்தரவிட்டுள்ளதாக வெளியிடப்பட்ட மீமை நடிகை லட்சுமி ராய் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

    ஆனால் விஜய் இப்படியொரு உத்தரவை வாய்மொழியாக கூட போடவில்லை. மருத்துவமனை சிகிச்சைகள், ஊழல் குற்றச்சாட்டுகள், சட்டம் ஒழுங்கு என்று ஏராளமான துறைகளில் விஜய் போட்ட உத்தரவுகள் என்று பல பொய்யான செய்திகள் வட இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது. இது 2014ல் வாட்ஸ் அப்பில் பாஜக பரப்பிய போலியான செய்திகளின் ஸ்டைலிலேயே இருக்கிறது.

    Advertisement

    இதன் பின்னணியில் முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது. வட மாநில இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்கள் மூலமாக இந்த வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக பெரும் தொகையையும் ரூட் நிறுவனம் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கான காரணம் விஜய்யை வட மாநிலங்களிலும் பிரபலமாக்க வேண்டும் என்பதுதான் என்று தெரிய வந்துள்ளது. அதாவது கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் செயல்பாடுகள் வட மாநிலங்களிலும் பிரபலமாகும். தமிழ்நாட்டின் திட்டங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலமாக தலைவர்கள் அங்கும் பிரபலம் அடைந்தார்கள்.

    Advertisement

    இதன் மூலமாக தேசிய அரசியலில் அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. ஆனால் விஜய்க்கு போதிய அரசியல் அனுபவமோ, ஆட்சி நிர்வாகத்தில் புதிய திட்டங்களோ கிடையாது. அப்படி இருக்கையில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்க விஜய் விரும்புகிறார். இதற்காக விஜய்யின் பின்பத்தை வட மாநிலங்களில் அதிகரிக்க இந்த வகையான போலி மீம்ஸை வெளியிடுவது தெரிய வந்துள்ளது.

    English Summary

    Vijay: Reason behind AI-Dubbed Speeches and Memes of TVK Chief Vijay Take North India by Storm