கலைஞர் ஸ்டைலை ஃபாலோ செய்யும் விஜய்.. வெளியூர் பயணத்திற்கு திடீர் ஆர்வம்.. பின்னணி என்ன?

  • சென்னை: முதல்வரான பின் விஜய் வெளியூர் பயணங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அமைச்சர்கள் பலரும் தங்கள் மாவட்டத்திற்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்த போதும் கூட விஜய் மறுத்துவிட்டார். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கு பின் விஜய் வெளியூர் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த ஸ்டாலின், ஒவ்வொரு மாதமும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வார். அதேபோல் அரசு நிகழ்ச்சி முடிவடைந்த பின், அன்று மாலையே கட்சியினரை சந்திக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பின், முதல்வர் விஜய் பெரிதாக வெளியூர் பயணம் மேற்கொள்ளவில்லை.

    Advertisement

    திருச்சி மற்றும் கரூர் மாவட்ட இடைத்தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மட்டும் விஜய் அந்த மாவட்டங்களுக்கு பயணித்தார். சட்டசபைத் தேர்தலின் போது ஒவ்வொரு கிராமத்திற்கு வருவேன் என்று விஜய் கூறி இருந்தார். ஆனால் விஜய் எங்கு சென்றாலும், அவரை காண கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இதனை விஜய் கவனித்து கொண்டே இருந்திருக்கிறார்.

    தேர்தல் வெற்றிக்கு பின் செங்கோட்டையன் உள்ளிட்ட கொங்கு பகுதி தவெக சீனியர்கள், விஜய்யை வைத்து பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் விஜய் அதனை மறுத்துவிட்டார். திடீரென மேட்டூர் அணையை திறக்க முதல்வர் விஜய் சேலம் வந்தது சீனியர் நிர்வாகிகளுக்கும், கட்சியினருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கிறது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய விஜய் விருதுநகர் வருவதும் பேசுபொருளாகி உள்ளது. முதல்வர் விஜய்யின் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அமைச்சர்களும் புரியாமல் இருக்கின்றனர். இதுதொடர்பாக விசாரித்த போது, அதிகாரிகளுடன் விஜய் சில விஷயங்களை ஆலோசித்திருக்கிறார்.

    அதாவது முதல்வராக இருக்கும் போது கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் செல்வார்களா என்று கேட்டிருக்கிறார். அப்போது ஜெயலலிதா அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் பயணம் செய்ய விரும்ப மாட்டார்,. அவரால் தான் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக அடிக்கல் நாட்டும் விழாவே பிரபலமடைய தொடங்கியது.

    Advertisement

    ஆனால் கலைஞர் கருணாநிதி ஒவ்வொரு மாதமும் வெளியூர் சென்று அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க ஆர்வம் காட்டுவார். அப்படி செல்லும் போதுதான் மக்களோடு மக்களாக இருக்க முடியும். அரசியல் தலைவர் மக்களிடம் இருந்து விலகி சென்றுவிடக் கூடாது என்பதாலேயே கலைஞர் கருணாநிதி இப்படியான விஷயங்களை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதனை கேட்டுக் கொண்ட விஜய், தனது பாலிசியை மாற்றி கொண்டிருக்கிறார். இனி ஒவ்வொரு மாதமும் வெளியூர் பயணம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனால் தவெக அரசு சார்பாக தொடங்கி வைக்கப்படும் திட்டங்களுக்காக இனி விஜய் அடுத்தடுத்து மாவட்ட வாரியாக பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijay: Reason behind CM Vijay Increases Outstation Visits After Months of Reluctance