என் ஆபிஸ் உள்ளேயே வந்து.. இப்படி பண்ணிட்டாங்களே.. கடுப்பான விஜய்.. ஏக கோபத்தில் இருக்கிறாராமே!

  • சென்னை: "என்னங்கடா நடக்குது இங்கே..?" - கோட்டை வட்டாரத்தில் இப்போது எக்கோ அடிக்கும் ஹாட் டாபிக் இதுதான். தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்தே, அவரது ஒவ்வொரு அடியும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. சினிமா பாணியில் பளபளக்கும் பிஆர் (PR) உத்திகள் ஒருபக்கம் கைதட்டல்களைப் பெற்றாலும், மறுபக்கம் அதுவே அவருக்குப் பெரும் தலைவலியாகவும் மாறியிருக்கிறது. அதன் உச்சகட்டமாகத்தான், முதலமைச்சரின் தனி அறையிலேயே (CM Cabin) எடுக்கப்பட்ட அந்த 'சினிமாடிக் ரீல்ஸ்' வீடியோ தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது!

    Advertisement

    நேற்று மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் பி. சிம்மச்சந்திரன் ஆகியோர் முதலமைச்சரை அவரது அறையில் சந்தித்துப் பேசினர். கோரிக்கைகளை மிக உன்னிப்பாகக் கேட்ட முதலமைச்சர், கோப்புகளைப் புரட்டிப் பார்த்தார். இதெல்லாம் வழக்கமான அரசு நடைமுறைதான். ஆனால், இந்தச் சந்திப்பு அப்படியே ஒரு லேட்டஸ்ட் சினிமா டீசர் போல, மாஸான பின்னணி இசையோடு சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆக உலா வரத் தொடங்கியபோதுதான் கோட்டை அதிகாரிகள் தலையிலடித்துக் கொண்டனர்.

    Advertisement

    "அவர் என்ன சிஎம்மா.. இல்ல இன்னும் நடிச்சிட்டிருக்காரா?"

    இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினரும் விஜய்யை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். "முதலமைச்சரின் அறை என்பது மாநிலத்தின் மிக உயரிய பாதுகாப்பு மற்றும் ரகசியம் காக்கப்பட வேண்டிய இடம். அங்கே ஒரு தனிநபர் மொபைல் போனைத் தூக்கிக்கொண்டு, இவ்வளவு க்ளோஸ்-அப்பில் வீடியோ எடுக்கிறார். அதை அந்த அறையில் இருக்கும் முதலமைச்சர் கவனிக்கவே இல்லையா? பக்கத்தில் உள்ளதை கூட பார்க்கவில்லையே" என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

    "ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவருக்கு தன் கண் முன்னால் என்ன நடக்கிறது, யார் வீடியோ எடுக்கிறார்கள் என்றுகூடவா தெரியாது? அந்த அளவுக்குத் திரைக்குப் பின்னால் இருக்கும் பிஆர் டீம் சொல்வதை மட்டும்தான் அவர் செய்கிறாரா?" என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.

    Advertisement

    கடுமையான அப்செட்டில் விஜய்!

    இந்த விமர்சனங்கள் அனைத்தும் முதலமைச்சர் விஜய்யின் காதுகளுக்குப் போயிருக்கின்றன. கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், விஜய் இந்த விவகாரத்தில் செம்ம அப்செட்டில் இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன.

    "சந்திப்புக்கு வந்த சிம்மச்சந்திரன், எதையும் சொல்லாமல் வீடியோ எடுத்துள்ளார். அது இந்த அளவுக்கு லோ-ஆங்கிள், க்ளோஸ்-அப் ஷாட்களுடன் ஒரு சினிமா ஷூட்டிங் போல எடுக்கப்படும் என்றோ, அதற்குப் பின்னால் மாஸ் மியூசிக் போட்டு 'ரீல்ஸ்' ஆக மாற்றுவார்கள் என்றோ அவர் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சம்பவம் தனக்கு நிர்வாக ரீதியான அவப்பெயரையும், அரசியல் ரீதியான சங்கடத்தையும் ஏற்படுத்திவிட்டதாக விஜய் எண்ணுகிறார்" என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

    Advertisement

    குறிப்பாக, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று சொன்னோம். ஆனால், அது இப்படி 'ரீல்ஸ் கலாச்சாரமாக' தரம் தாழ்ந்து விமர்சிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தன் தனிப்பட்ட அதிகாரிகளிடம் விஜய் அனல் பறந்ததாகச் சொல்கிறார்கள்.

    மொபைல் போன்களுக்கு தடை?

    இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, கோட்டையின் பாதுகாப்பு நெறிமுறைகளை (Protocol) முற்றிலுமாக மாற்றியமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை முதலமைச்சரைச் சந்திக்க வரும் விஐபிகள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் தங்களின் மொபைல் போன்களை வெளியே வைக்கத் தேவையில்லை என்ற தளர்வு இருந்தது. ஆனால், இனிமேல் முதலமைச்சரின் அறைக்குள் நுழையும் எவரும் - அவர்கள் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் - தங்களது மொபைல் போன்களை வெளியிலேயே ஒப்படைத்துவிட்டு வர வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்த தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    "அரசு நிர்வாகம் என்பது ரீல்ஸ் போடும் களம் அல்ல; அது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கான இடம் என்பதைப் புதிய முதலமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்பதே நடுநிலையாளர்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸ். பிஆர் (PR) மாயைகளில் இருந்து வெளிவந்து, விஜய் எப்போது முதிர்ச்சியான நிர்வாகியாக நிமிரப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    English Summary

    Vijay Reels Controversy: Will CM Ban Mobile Phones Inside Secretariat Cabin After Viral Video Backlash?