சென்னை: மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் மாநில அரசு இனைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த விழாவில் முதல்வர் விஜய் பேசினார். மேலும், மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் தேவை மறு ஆய்வு செய்து மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என விஜய் கூறினார். பிரதமர் மோடியும் விஜய் பேசியதை கூர்ந்து கவனித்ததோடு, அவர் பேசி முடித்ததும் எழுந்து நின்று கை தட்டினார்.
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தந்தார். சென்னையில் பூந்தமல்லி டூ வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் விஜய்யும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் மூளை ஆராய்ச்சி மையத்தினை இருவரும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது:-
முதல்வர் விஜய் பேசியதாவது:- தமிழ்நாடு பல்லாயிரம் ஆண்டுகளை கடந்த பண்பாடுகளையும், அவற்றை இன்றளவும் உயிர்ப்புடன் பாதுகாத்து வரும் மக்களையும் கொண்ட மாநிலமாகும். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழை கொண்ட மக்கள் வாழும் இம்மாநிலம் சிறப்பான வரலாறு, கட்டடக்கலை, பண்புகளால் தனித்துவம் பெற்றுள்ளது. இந்த அரசு அமைந்த 100 நாட்களில் ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மீனவர் நலன், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. நமது அரசு, குழந்தைகள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு தொழில், அறிவியல், கல்வி, கலை, இலக்கியம், சமூகநீதி ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிப்பை தமிழ்நாடு அளித்து வருகிறது. ஸ்ட்ராங் ஸ்டேட்ஸ் மேக்ஸ் எ ஸ்ட்ராங் இந்தியா.. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை. தமிழ்நாடு புதிய வாய்ப்புகளை உருவாக்கி 2036 ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் டாலர் எக்கனாமி என்ற இலக்கினை நோக்கி வேளாண்மை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வளர்ச்சியின் பயன் சென்னையை மாநகரத்தை தாண்டி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.. ஓசூர் பொம்மச்சந்திரா மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இரு மாநிலங்களும் பயன் அடையும். தமிழ்நாட்டுக்கு கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களும் வேண்டும். சென்னை மெட்ரோ 3.0 திட்டமும் வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறு ஆய்வு செய்து ஒப்புதல் தர வேண்டும். தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைப்பதாகவும் முதல்வர் விஜய் பேசினார்.மக்களின் நலனே முக்கியம்
அடுத்த பிரதமர் விஜய்.. மோடி பேசும் போதே பதாகைகள் காட்டிய தவெகவினர்.. பிரதமர் கொடுத்த ரியாக்ஷன்
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படனும்
மெட்ரோவில் மோடியுடன் பயணம் செய்த விஜய்! வெளியே வந்ததும் கார் மாறி ஏறியதால் பரபரப்பு.. அலர்ட் செய்த அதிகாரிகள்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்
“முதல்வர் விஜய் உடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தை முன்னெடுப்பேன்” பிரதமர் மோடி பேசியது என்ன?