கள்ளச்சந்தையில் மது விற்றால் ஸ்டேஷன் முற்றுகை! சபதம் போட்ட விக்னேஷ்! TASMAC துறையை அள்ளித்தந்த விஜய்

  • சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில், மிக எப்போதுமே லைம்லைட்டில் இருக்கும் 'மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு' (Prohibition and Excise) துறை யாருக்குச் செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பலமாக இருந்தது.

    Advertisement

    எதிர்க்கட்சிகள் எப்போதுமே குறிவைக்கும், அதேநேரம் அரசின் வருவாயில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இந்த முள் கிரீடத்தை, கொங்கு மண்டலத்தின் இளம் ரத்தமான கிணத்துக்கடவு தொகுதி தவெக எம்.எல்.ஏ விக்னேஷின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

    Advertisement

    அதிமுகவின் எஃகுக் கோட்டையாகக் கருதப்பட்ட கிணத்துக்கடவில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் வீழ்த்தி, சுமார் 11,710 வாக்குகள் வித்தியாசத்தில் கெத்தாக ஜெயித்தவர் இந்த 38 வயது விக்னேஷ். தற்போது அவருக்கு இந்த 'பவர்ஃபுல்' துறை ஒதுக்கப்பட்டிருப்பது, கொங்கு அரசியலில் தவெக-வின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

    செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு பாணி... விக்னேஷுக்கு இருக்கும் சவால்!

    கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை என்பது சாதாரணமான துறையாகப் பார்க்கப்படவில்லை. திமுகவின் மிகச் செல்வாக்குமிக்க, தவி. செந்தில் பாலாஜி இந்தத் துறையைக் கையாண்டார். அவர் அமைச்சராக இருந்தபோது இத்துறை சந்தித்த சர்ச்சைகளும், அரசியல் அனல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்குப் பிறகு, திமுகவின் சீனியர் முகமும் நம்பகமான அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் இந்தத் துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

    Advertisement

    இப்படி திமுகவின் 'ஹெவிவெயிட்' தலைவர்கள் அமர்ந்த நாற்காலியில், இப்போது தவெக-வின் இளம் முகமான கிணத்துக்கடவு விக்னேஷ் அமரப்போகிறார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய தவெக ஆட்சியில், இத்துறைக்கு விக்னேஷ் எப்படிப்பட்ட புதிய நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்போகிறார்? திமுக அமைச்சர்கள் சந்தித்த அதே சவால்களை இவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    "கள்ளச்சந்தையில் மது விற்றால் ஸ்டேஷன் முற்றுகை!" - விக்னேஷின் பழைய சபதம்!

    அமைச்சரவை அறிவிப்புக்கு முன்பாக, எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்ற உடனேயே விக்னேஷ் தனது தொகுதி மக்களிடம் பேசிய பேச்சு இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால், பொதுமக்களைத் திரட்டி நானே காவல் நிலையங்களை முற்றுகையிடுவேன். எனது தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியம்" என்று ஆக்ரோஷமாகப் பேசியிருந்தார் விக்னேஷ்.

    Advertisement

    அப்படிப் பேசிய விக்னேஷிடமே, இப்போது ஒட்டுமொத்தத் தமிழகத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையையே தூக்கிக் கொடுத்திருக்கிறார் விஜய். "தன் தொகுதியில் கள்ளச்சந்தை மதுவை ஒழிப்பேன்" என்று சவால் விட்டவர், இப்போது ஒட்டுமொத்தத் தமிழகத்தின் டாஸ்மாக் நிர்வாகத்தையும், கள்ளச்சாராய ஒழிப்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.

    விஜய்யின் 'கொங்கு' ஸ்கெட்ச்!

    அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் விக்னேஷ் மற்றும் கோவை வடக்கு சம்பத்குமார் போன்ற இளைஞர்களை வெற்றி பெற வைத்த விஜய், விக்னேஷுக்கு இவ்வளவு பெரிய பவர்ஃபுல் துறையைக் கொடுத்ததன் மூலம் கொங்கு மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

    Advertisement

    திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றத்தான் செந்தில் பாலாஜி போன்ற அஸ்திரங்களைப் பயன்படுத்தின. இப்போது அதே பாணியில் விக்னேஷை முன்னிறுத்தி, கொங்கு பெல்ட்டில் தவெக-வின் வேர்களை இன்னும் ஆழமாகப் பாய்ச்சத் திட்டமிட்டுள்ளார் விஜய்.

    "திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜியும் தங்கம் தென்னரசுவும் பம்பரமாகச் சுழன்ற அதே எக்சைஸ் நாற்காலி! 'கள்ளச்சந்தையில் மது விற்றால் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிடுவேன்' என்று கர்ஜித்த கிணத்துக்கடவு விக்னேஷை, இப்போது அதே எக்சைஸ் துறையின் பாஸாக உட்கார வைத்திருக்கிறார் விஜய். 'முற்றுகையிடுவேன்' என்றவரை முறையாக நிர்வாகம் செய் என்று விஜய் கொடுத்திருக்கும் இந்த அசைன்மென்ட், தவெக கோட்டையின் மாஸ் மூவ்!"

    Advertisement

    அதிமுக அதிருப்தியாளர்களுக்குக் கதவடைப்பு, காங்கிரஸுக்கு 2 சீட்டுகள் எனப் பரபரத்துக் கிடக்கும் இந்த 23 புதிய அமைச்சர்கள் பட்டியலில், விக்னேஷின் இந்த எக்சைஸ் என்ட்ரிதான் தற்போதைய ஹாட் டாபிக்!

    English Summary

    Vijay’s Big Kongu Move: Kinathukadavu Vignesh Bags the Excise Ministry Once Held by Senthil Balaji