விஜய் அமைதி ரொம்ப ஆபத்து.. ஓராண்டில் ஏராளமான மாற்றம் வரும்.. திமுகவுக்கு ஆதவ் அர்ஜுனா வார்னிங்

  • சென்னை: தவெக ஆட்சிக்கு அரையாண்டு ஆகிவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மாற்று அரசியலை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்றனர். நிர்வாகத்தில் பெரிதாக மாற்றங்கள் ஏற்படவில்லை. முதலமைச்சர், அமைச்சர், எம்எல்ஏ, அதிகாரிகள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் பொறுமையாக இருக்கிறார் என்றால், திட்டம் தீட்டுகிறார் என அர்த்தம். இன்னும் ஓராண்டில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

    Advertisement

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "எதிர்க்கட்சிகள் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். காலை 10 மணிக்கு விஜய் அண்ணாவை எதிர்த்து ஏதாவது ட்வீட் போட வேண்டும். அதன் பிறகு தூங்க சென்றுவிடுவார்கள். இதையே வேலையாக வைத்துள்ளனர். உதயநிதி தினசரி 3 ட்வீட் போடுவார். அது டிவியில் வரும். வீட்டை விட்டு வெளியில் வராமல் இதை மட்டும் செய்கிறார்கள்.

    Advertisement

    அதிகம் பேச மாட்டோம்

    இதற்கெல்லாம் பதில் கொடுத்து கொண்டிருந்தால் செயலலில் போக்கஸ் செய்ய முடியாது. நான் எங்கள் அண்ணன் விஜயை பார்த்து கற்று கொண்டுள்ளேன். அதிகம் பேசாமல் செயலில் காட்ட வேண்டும்.50 ஆண்டுகளில் செய்ய முடியாததை, தவெக எப்படி செய்துள்ளது என்பதை ரோட்டை பார்த்தே தெரிந்து கொள்வார்கள். தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்துவோம். வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டி 40 ஆண்டுகளாகிவிட்டது.

    அதையும் சரி செய்வோம். இது பெண்கள் ஆட்சி. உங்கள் வீட்டு பிள்ளை விஜய் அண்ணா ஆட்சி. நீங்கள் தான் அங்கீகாரம் கொடுத்தீர்கள். எங்கள் பிள்ளைகள், குடும்பம் உள்ளிட்ட யாரும் காரணமில்லை. வில்லிவாக்கத்தில் நான் தோற்பதற்காக ரூ.100 கோடி செலவு செய்தனர். நான் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. என்னை 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

    Advertisement

    40 கட்சியை எதிர்த்தவர்

    ஜெயித்தாலும், தோற்றாலும் மக்களுடன் நிற்க முடிவு செய்தோம். ஒவ்வொரு தெருவிலும் பெண்கள் எங்களை அரவணைத்தனர். அந்த பிரச்சாரம் தான் தெளிவான எண்ணத்தை கொடுத்தது. அந்த நம்பிக்கையை உடைக்க எதிர்க்கட்சி தலைவர் தவறான கருத்துகளை வெளியிடுகிறார். 50 ஆண்டுகள் அந்த குடும்பம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்த சிஸ்டத்தை மாற்றுவது சாதரணமல்ல. அனைத்து துறைகளிலும் எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் உள்ளன.

    இந்த பிரச்சனைகளை ஓரிரண்டு ஆண்டுகளில் சரி செய்துவிடுவோம். 40 கட்சியை தைரியமாக எதிர்த்து நின்று ஜெயித்தவருக்கு அரசாங்கத்தில் உள்ள ஓட்டையை அடைக்க தெரியாதா. இது அதிகாரிகளின் ஆட்சி என்று நிறைய பேர் சொல்கிறார்கள். இன்னும் ஒரு வருடம் மட்டும் பொறுங்கள். அவரைப்பற்றி உங்களுக்கு தெரியும். அவர் அமைதியாக இருக்கிறார் என்றால் திட்டம் தீட்டுகிறார் என அர்த்தம். அது உடனிருந்த எங்களுக்கு தான் தெரியும்" என்றார்.

    English Summary

    If Vijay is remaining patient, what does it mean when he devises a plan? Just wait and see what unfolds over the next year said Minister Adhav Arjuna.