CM Vijay மிகப்பெரிய மூவ்.. 6 மாவட்டங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்.. எதற்காக இந்த ஏற்பாடு?

  • சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அமைச்சரவை விரிவாக்கத்தில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று 23 பேர் அமைச்சர் பொறுப்பேற்ற நிலையில் மொத்தம் 33 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காரணத்தால் நிர்வாக பணிகள் இனி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு, காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, மதுரை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு முக்கிய மாவட்டங்களுக்கு தலா இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நியமனத்திற்கு பின்னால் முக்கிய காரணம் இருப்பதாக தெரிகிறது.

    Advertisement

    முதல்வர் விஜய்

    தமிழ்நாட்டு முதல்வர் விஜய் தலைமையிலான இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விஜய் திட்டமிட்டு 6 மாவட்டங்களுக்கு 2 அமைச்சர்களவை நியமிக்க காரணம் என்ன? இந்த ஆறு மாவட்டங்களும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    கட்டம்கட்டப்பட்ட 6 மாவட்டங்கள்

    இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இதேபோல் விவசாயம், தொழில், வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. எனவே, இந்த மாவட்டங்களுக்கு கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டால், வளர்ச்சி திட்டங்களுக்கான முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு, திட்டங்கள் சீராக செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் வேகமாக வளரும் என்ற கணக்குடன் இத்தகைய டபுள் இன்ஜின் நிர்வாக முறையை கொண்டு வரலாம் என விஜய் திட்டமிட்டு இருக்கலாம்.

    Advertisement

    மேலும், இந்த ஆறு மாவட்டங்களும் தமிழ்நாட்டின் வடக்கு முதல் தெற்கு வரை பரவலாக அமைந்துள்ளன. இதனால் அண்டை மாவட்டங்களின் வளர்ச்சிக்கும், நிர்வாக வசதிக்கும் இந்த முடிவு பெரிதும் உதவும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல்

    ஒரே இடத்தில் பொருளாதார நடவடிக்கைகள் குவிந்திருக்கும் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், தமிழ்நாடு பல நகரங்களைச் சுற்றி வளர்ச்சி அடைந்து வருவதற்கான வளர்ச்சி மாடலை திராவிட கட்சிகள் உருவாக்கியிருக்கும் வேளையில். விஜய் தலைமையிலான இந்த இரட்டை அமைச்சர்கள் முடிவு இந்த வளர்ச்சியை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்ட வாரியான GDP

    2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாவட்ட உற்பத்தி மதிப்பு (GDDP) ரூ.26,88,963 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 13.31 சதவீதம் அதிகம். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவை முன்னிலையில் இருந்தாலும், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை, ஈரோடு, சேலம், மதுபை போன்ற மாவட்டங்களும் முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டமும் தொழில் மையங்களால் இணைக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இரட்டை அமைச்சர்கள் முறை

    இந்தப் பின்னணியில், முதலமைச்சர் விஜய்யின் இந்த இரட்டை அமைச்சர்கள் முடிவு தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சி மாதிரியை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். நகர்ப்புற - கிராமப்புற இடைவெளியை குறைத்து, அனைத்துப் பகுதி மக்களும் பொருளாதார வளர்ச்சியின் பலனைப் பெறும் வகையில் இந்த அமைச்சரவை செயல்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அதிக அமைச்சரகள் கொண்ட மாவட்டங்கள்

    இதேபோல் சென்னையில் 6 அமைச்சர்கள், நாமக்கல் மாவட்டத்துக்கு 3 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

    மேலும் 2ஆம் நிலை, 3ஆம் நிலை மாவட்டங்களாக சேலம், செங்கல்பட்டு, கடலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 அமைச்சர் பதவி வீதம் வழங்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கும் புதிய அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடுகள் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அமைச்சரவை பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமநிலை நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    English Summary

    Chief Minister Vijay has made a major strategic decision in Tamil Nadu’s first coalition cabinet by assigning two ministers each to six crucial economic powerhouses — Kancheepuram, Erode, Coimbatore, Madurai, Thoothukudi, and Virudhunagar. This move aims to accelerate industrial growth, infrastructure development, and balanced regional progress across the state. முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அமைச்சரவையில் காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 6 முக்கிய பொருளாதார மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள் நியமித்துள்ளார். தொழில் வளர்ச்சி மற்றும் சமநிலை நிர்வாகத்தை வேகப்படுத்தும் இந்த முடிவு தமிழ்நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை வலுப்படுத்தும்.