நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை!

  • சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிய கட்சியாக களமிறங்கி முதல்முறையாக தேர்தலைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்தது மட்டுமல்லாமல், பல அரசியல் மரபுகளையும் உடைத்த தேர்தலாக, இத்தேர்தலை மாற்றியுள்ளது. இந்த தேர்தல் மூலம் தமிழக அரசியலில் முதல் முறையாக நடந்த முக்கிய சம்பவங்கள் பல அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாழ்ந்ததாகப் பார்க்கப்டுகிறது. அந்த வகையில் சுமார் 25 'முதன்முறை' சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறார் விஜய்.

    Advertisement

    2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, திமுக - அதிமுக என்ற இரு பெரிய திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய அரசியல் கட்டமைப்பையே முற்றிலும் மாற்றியமைத்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    அதிலும் குறிப்பாக நடிகர் விஜய், எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல், முதல் தேர்தலிலேயே ஆட்சியை அமைத்தது மிகப்பெரிய அரசியல் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், சுமார் 25 முதன்முறை சம்பவங்களையும் நிகழ்த்தியுள்ளார் விஜய்.

    தமிழக அரசியல்

    தமிழக அரசியலில் முதல் முறையாக, ஒரு புதிய கட்சி தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்துள்ளது.
    தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளிலும் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட முதல் பெரிய கட்சியாக அமைந்தது. முதல் முறையாக நான்கு முனைப் போட்டி உருவானதும் இந்த தேர்தலில் தான்.. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதிகபட்சமாக 84.69 சதவீத வாக்குகள் பதிவானது.

    Advertisement

    தவெக

    போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 100-ஐ தாண்டிய இடங்களை கைப்பற்றிய முதல் புதிய கட்சியாக தவெக உருவானது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், புதிய கட்சியின் வேட்பாளரிடம் தோல்வியடைந்தது முதல் முறையாகும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பிறகு, எதிர்க்கட்சி தலைவராக கூட அமர முடியாத நிலை உருவானது இதுவே முதல் முறை. தவெக தலைவர் விஜய், போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க சம்பவமாக அமைந்தது.

    புதிய அரசு

    தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தொங்கு சட்டமன்றம் உருவானது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆதரவுடன் புதிய அரசு அமைந்தது. தமிழகத்தில் முதல் முறையாக திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற விஜய், கருப்பு - வெள்ளை நிற உடையில் விழாவில் பங்கேற்றது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. பதவியேற்பு விழா மேடையிலேயே முதல் முறையாக அமைச்சர்களுடன் குழு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்த முதலமைச்சராக விஜய் மாறினார்.

    Advertisement

    காங்கிரஸ் கட்சி

    தலைமைச் செயலகத்துக்கு செல்லும் முன்பே, பதவியேற்பு மேடையிலேயே மூன்று முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்ட முதல் முதலமைச்சர் என்ற சாதனையும் அவருக்குக் கிடைத்தது. தமிழக அரசியலில் முதல் முறையாக அனைத்து கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று வாழ்த்து பெற்ற புதிய முதலமைச்சர் என்ற பதிவும் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தவெகவுடன் கூட்டணி வைத்தது. 1967-க்கு பிறகு முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைப்பு உருவானது.

    விடுதலை சிறுத்தைகள்

    விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றன. தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக 8 தலித் அமைச்சர்களுக்கு இடம் வழங்கப்பட்டது. 74 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 4 பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். எந்த பெரிய தேசிய அல்லது மாநில கட்சியின் ஆதரவும் இல்லாமல், தமிழர் அடையாளத்தை முன்வைத்து ஒரு புதிய கட்சி ஆட்சியை பிடித்தது தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    2026 தேர்தல்

    இந்த தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலின் எதிர்கால கூட்டணிகள், தலைமை மாற்றங்கள் மற்றும் புதிய தலைமுறை அரசியலுக்கான தொடக்கமாகவும் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம், 2026 தேர்தலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English Summary

    Vijay-led TVK reshapes Tamil Nadu politics with historic wins, coalition government and multiple first-time political records in 2026 polls.