சென்னை: தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் சுதந்திர தின விழாவில் நேரு ஸ்டேடியத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் விஜய். சுதந்திர தின அணிவகுப்பு ஊர்தியில் முதலமைச்சர் விஜய் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்த போது, கேலரியில் உட்கார்ந்திருந்த முக்கியமான விஐபிகளுக்குத் தனது கையை உயர்த்தி சல்யூட் அடித்தார். அப்போது அங்கே நடந்த நிகழ்வு தான் இப்போது அனைவரின் பார்வையையும் உற்று நோக்க வைத்திருக்கிறது.
சுதந்திர தின அணிவகுப்பை காண, அங்கிருந்த கேலரியின் முதல் வரிசையில், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.
விஜய்யை பார்த்ததும் எஸ்.ஏ.சியும் ஷோபாவும் கைகூப்பி வணக்கம் வைக்க, திரிஷா மட்டும் சட்டென்று எழுந்து நின்று விஜய்யைப் போலவே கம்பீரமாகத் திரும்ப சல்யூட் அடித்தார். திரிஷா அடித்த அந்த சல்யூட்டை, ஊர்தியில் இருந்தபடியே புன்னகையோடு முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்ட அந்த நொடி, அங்கிருந்த கேமராக்கள் அனைத்தின் பார்வையையும் த்ரிஷா பக்கமே திருப்பியது. மஞ்சள் நிறச் சேலையில், பச்சை நிற ஜாக்கெட்டில் அத்தனை அழகாக வந்திருந்த திரிஷாவின் முகத்தில் அப்படியொரு பூரிப்பும் மகிழ்ச்சியும் தாண்டவமாடியது. ஏற்கனவே விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்விலும் கூட, நடிகை திரிஷா முதல் வரிசையில் வந்து உட்கார்ந்து அவரை உற்சாகப்படுத்தியது மிகப்பெரிய கவனத்தை திருப்பியருந்தது.. விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலுக்குக் காரணம் என்றெல்லாம் வதந்திகள் பரவிய நிலையில், திரிஷாவின் தொடர் வருகை ஒவ்வொரு முறையும் சந்தேகக் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. விஜய் விவாகரத்து பெறப்போகிறார் என்ற செய்திகள் வெளியான உடனே, ஒரு விஐபி திருமணத்தில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாகக் கலந்துகொண்டது, விஜய் தேர்தலில் வெற்றி பெற்றதும் திருப்பதிக்குச் சென்றுவிட்டு நேராக விஜய்யின் வீட்டுக்குத் திரிஷா சென்று வாழ்த்தியது, அஜித் குமாரின் அம்மா மறைவின் போது விஜய்யும் திரிஷாவும் ஒன்றாகவே சென்று அஞ்சலி செலுத்தியது என்று தொடர்ந்து நடக்கும் இந்த நிகழ்வுகள் எல்லாமே பெரும் பரபரப்பையே ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில், இன்று நாட்டின் மிக முக்கியமான சுதந்திர தின விழாவிலும் திரிஷா முதல் வரிசையில் விஜய்யின் பெற்றோர் அருகிலேயே வந்து உட்கார்ந்திருந்தது, விஜய்-சங்கீதா மீண்டும் இணைந்து விடுவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது. ஒரு பக்கம் த்ரிஷா அடித்த சல்யூட்டும், விஜய் அதை ஏற்றுக்கொண்ட அந்தப் பார்வையும் இணையத்தில் செம வைரலாகி வர, இன்னொரு பக்கம் "சங்கீதா ஆர்மி" ரசிகர்கள் இந்த காட்சிகளைப் பார்த்து அப்செட்டில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ, இந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றியதை விட, விஜய்யும் திரிஷாவும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட அந்த ஒரு சல்யூட் தான் இப்போது தமிழகத்தின் நம்பர் 1 ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது...!!விஜய்க்கு சல்யூட் வைத்த திரிஷா
தொடர் சலசலப்புகள்
சங்கீதா ஆர்மி