பரஸ்பர விவாகரத்து? அல்லது மத்தியஸ்தம்? விஜய்- சங்கீதா விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்?

  • சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    வாபஸ் பெற்றார்

    சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி, விவாகரத்து வழக்கை இனி தொடர விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். அவரது கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதித்தது. மேலும், எதிர் தரப்பு, அதாவது விஜய் தரப்பு வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டபோது, மனுவை வாபஸ் பெறுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதேநேரம் எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் புதிய விவாகரத்து மனுவை தாக்கல் செய்ய சங்கீதாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விவாகரத்து மனு முடிவுக்கு வந்தாலும், எதிர்காலத்தில் என்னென்ன சட்ட வாய்ப்புகள் உள்ளன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    1. இணைந்து வாழலாம்

    விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதால், தற்போது இருவருக்குமான திருமண உறவு என்பது சட்ட ரீதியாக தொடர்கிறது. எனவே, இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்தால், அதற்காக தனியாக நீதிமன்ற நடவடிக்கை எதுவும் தேவையில்லை. அவர்கள் சாதாரண தம்பதி போல ஒன்றாக இணைந்து வாழலாம்.

    2. மத்தியஸ்தம்

    தம்பதியினர் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தேவைப்பட்டால் திருமண ஆலோசனை அல்லது மத்தியஸ்தம் மூலமாகவும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யலாம். இருவரும் தனித்தனியாக வாழ முடிவு செய்தாலும், திருமணத்தை சட்டரீதியாக ரத்து செய்யாமல் இருந்து கொள்ளலாம்.

    Advertisement

    3. பரஸ்பர சம்மத விவாகரத்து

    எதிர்காலத்தில் இருவரும் திருமண உறவை தொடர முடியாது என்று முடிவு செய்தால், Mutual Consent Divorce எனப்படும் பரஸ்பர சம்மத விவாகரத்து முறையை தேர்வு செய்யலாம். இதில் இருவரும் இணைந்து விவாகரத்துக்கு விண்ணப்பிப்பார்கள். பொதுவாக, இரு தரப்பினரின் சம்மதம் இருப்பதால், இதுபோன்ற பரஸ்பர விவகாரத்து வழக்கு சீக்கிரம் நடந்து முடிந்துவிடும்.

    4. மீண்டும் மனு தாக்கல் செய்யலாம்

    நீதிமன்றம் தற்போதைய மனுவை வாபஸ் பெற அனுமதித்ததுடன், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் புதிய மனு தாக்கல் செய்யவும் சுதந்திரம் வழங்கியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் எதாவது காரணத்திற்காக விவகாரத்து பெற விரும்பினால்.. அப்போதும் சங்கீதா விவாகரத்து மனுவை தாக்கல் செய்யலாம்.

    Advertisement

    5.பிரிந்து வாழ்வது

    அதேபோல விவாகரத்து இல்லாமல் சட்டரீதியாக தனித்தனியாக வாழ விரும்பினால் அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுதான் Judicial Separation. இதன் மூலம் திருமண உறவு முழுமையாக முடிவுக்கு வராது. ஆனால், கணவன்-மனைவி தனித்தனியாக வாழ்வதற்கு சட்டரீதியான ஏற்பாடு கிடைக்கும்.

    தற்போதைய நிலை என்ன?

    தற்போது சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது விவகாரத்து வழங்கப்படவில்லை. அதேநேரம் வரும் காலத்தில் மேலே கூறப்பட்டுள்ள 5 ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்று தான் நடக்கும்.

    English Summary

    Tamil Nadu CM Vijay wife Sangeetha has withdrawn her divorce petition filed before the Chengalpattu Family Court(விஜய் சங்கீதா விவகாரத்து வழக்கு செய்திகள்): Vijay Sangeetha Divorce case latest news in tamil.