விஜய் ஸ்டைல்.. கொளத்தூர் கொத்து பரோட்டா விநாயகர்! போலீஸ் கெடுபிடி.. இரவோடு இரவாக அகற்றம்! என்னாச்சு?

  • சென்னை: சென்னை கொளத்தூரில், சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் காட்டியை 'ஓவர்' சைகையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 9 அடி உயர விநாயகர் சிலை போலீசார் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்ததால் சிலையை அகற்ற வலியுறுத்திய நிலையில், விழா குழுவினர் சிலையை மாற்றி அமைத்தும், இறுதியில் சிலையையே அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை கொளத்தூர் துர்கை நகர் பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. 9 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை, சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் காட்டிய தனித்துவமான தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டி ருந்தது.

    Advertisement

    சட்டமன்றத்தில் விஜய் உரையாற்றிய பாணி, அவர் அணிந்திருந்த உடை, காலணி, பெல்ட் என அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, விநாயகருக்கு பிரத்யேக தோற்றம் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப் பட்ட இந்த சிலை, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களை வெகுவாக கவர்ந்ததுடன், சமூக வலைதளங்களிலும் பரவியது.

    இந்நிலையில், நேற்று மாலை அங்கு வந்த ராஜமங்கலம் போலீசார், சிலைக்கு ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிலையை உடனடி யாக அகற்ற வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சிலை வைக்கப்பட்டிருந்த மேடை, பேனர் மற்றும் சிலை ஆகியவை துணியால் மூடப்பட்டன. இதையடுத்து, சிலை வைத்திருந்தவர்கள் போலீசாரிடம் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினர்.

    Advertisement

    தொடர்ந்து, சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட முதல்வர் ஜோசப் விஜய் தோற்றத்தில் இருந்த விநாயகர் சிலையை மாற்றி அமைக்க விழா குழுவினர் முடிவு செய்தனர். முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் காட்டிய சைகை, அவர் அணிந்திருந்த உடை, காலணி மற்றும் பெல்ட் உள்ளிட்ட தோற்ற அம்சங்கள் மாற்றப்பட்டு, வேட்டி, சட்டை அணிந்த பிள்ளையார் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்வது போல் வடிவமைக்கப்பட்டது.

    ஆனால், போலீசாரின் அழுத்தம் தொடர்ந்ததாக கூறப்படும் நிலையில், விழா குழுவி னர் விநாயகர் சிலையை முழுவதுமாக அகற்றப்பட்டு வெறும் மேடை மட்டுமே காட்சியளிக்கிறது. இதனால், விஜய் ஸ்டைலில் உருவாக்கப் பட்ட விநாயகர் சிலைக்கு போலீசார் ஆட்சேபனை தெரிவித்த சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A Vijay-style 9-foot Vinayagar idol was removed in Kolathur after police objections, sparking controversy during Vinayagar Chaturthi.