ரூ.11 கோடி செலவு.. நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் விஜய் அலுவலகம்.. நிதி ஒதுக்கிய தமிழக அரசு!

  • சென்னை: ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருந்து முதல்வர் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகத்தை அமைப்பதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் அலுவலகம் மட்டுமல்லாமல், முதல்வரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அறையும் அங்கு மாற்றப்பட்டு வருகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 1, 3, 5, 7, 8 ஆகிய தளங்களின் கூட்ட அரங்குகளை பொது கட்டிய பிரிவுக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனால் நாமக்கல் கவிஞர் மாளிகையில் செயல்பட்டு வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலக பிரிவுகள் மொத்தமாக கலைவாணர் அரங்கிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிதாக அமைக்கப்படும் முதல்வர் அறையில் இருந்து விஜய்யால் ஒரு பக்கம் கடற்கரையையும், ஒரு பக்கம் சென்னை மாநகரையும் பார்க்க முடியும்.

    முதல்வர் விஜய்யின் இந்த மாற்றத்திற்கு அவரின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. முதல்வரின் அறை வாஸ்து முறைப்படி இல்லை என்று அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அது வாஸ்து சரியில்லாததால், தவெக ஆட்சி தொடர முதல்வர் விஜய் உச்சத்தில் உள்ள இடத்தில் இருந்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    Advertisement

    அவரின் அறிவுறுத்தல் பெயரிலேயே இந்த மாற்றம் நடப்பதாக பேசப்படுகிறது. விஜய் செய்து வரும் இந்த மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே கஜானா காலி என்று முதல்வர் விஜய் கூறி இருந்த நிலையில், இந்த மாற்றம் தேவை தானா என்று பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விஜய்யின் அலுவலகம் மட்டுமல்லாமல் செயலாளர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள், ஆலோசகர்கள் என்று பலரின் அறைகளும் இங்கு மாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vijay: Tamil Nadu Govt Allocates ₹11 Crore for CM Joseph Vijay New Office at Namakkal Kavignar Maaligai