சென்னை: தமிழகத்தில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் மற்றும் அரசுப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இந்த அதிகாரிகள் பொறுப்புப் பரிமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக சித்ரா விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட முதன்மைத் துறைகளில் புதிய அதிகாரிகள் பொறுப்பேற்க ஏதுவாக இந்த இடமாற்றங்கள் வழிவகை செய்துள்ளன தமிழகத்தில் அரசுப் பணிகளை மேலும் திறம்படக் கொண்டு சேர்க்கும் நோக்கில், தலைமைச் செயலகத்தின் முக்கியப் பிரிவுகள் மற்றும் களப் பணிகளில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைப் பகிர்ந்தளிக்கும் வகையில் இந்த அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை, சிறு துறைமுகத்துறை செயலாளராக இருந்த செல்வராஜ் பொதுப்பணி துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணி முதன்மை செயலாளர் சுன்சுங்கம் ஜடக் சிரு, நெடுஞ்சாலை, சிறு துறைமுகத்துறை முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளராக சந்தீப் நந்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறித்துறை இயக்குநராக உமா மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக பிரதீப்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பணியாளர் தேர்வாணைய தலைவராக அழகு மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். காதி மற்றும் கிராமத்தொழில் மேம்பாட்டு வாரிய செயலாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நிர்வாகச் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும், மக்கள் நலத்திட்டங்களை தங்குதடையின்றிச் செயல்படுத்தவும் அரசு மேற்கொண்டு வரும் இந்த தொடர் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், அரசு வட்டாரங்களில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.