ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் விஜய் சந்திப்பு! வீட்டில் நடந்த மீட்டிங்.. ஆலோசித்தது என்ன?

  • சென்னை: ஆந்திர பிரதேச மாநிலம் சென்ற முதல்வர் விஜய் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உடன் இருந்தனர். இன்று பிற்பகல் ஆந்திரா மாநிலம் விஜயவாடா விமான நிலையம் சென்ற விஜய் அங்கிருந்து கனக துர்கா கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை 4.30 மணியளவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு விஜய்யை உற்சாகத்துடன் வரவேற்றார்.

    Advertisement

    சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 2.251 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிநீர் இணைப்பு திட்டங்களிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் தற்போதைய நிலை மற்றும், அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க விஜய் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக எல்லையை நோக்கி பாயும் நதிகளின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதனால் தமிழக மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இன்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்ட முதல்வர் விஜய் ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்திற்கு 3.45 மணியளவில் வந்தடைந்தார்.

    Advertisement

    பின்னர் மாலை 4.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு விஜய்க்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. முதல்வர் விஜய்யும் அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் முதல்வர் விஜய் விஜயவாடாவில் உள்ள ஆந்திர பிரதேச முதல்வர் சந்திராபு நாயுடுவின் இல்லத்திற்கு சென்றார். அப்போது அவர் விஜய்யை உற்சாகத்துடன் வரவேற்றார்.

    பின்னர் இரு மாநில முதல்வர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். இதன்பின் துணை முதல்வர் பவன் கல்யாண் உடன் சந்திப்பு நடக்கவுள்ளது. அப்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான நிதிநீர் பங்கீட்டு பிரச்சனைகள் மற்றும் அணை தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக தெரிகிறது.

    Advertisement

    இரவு 8.30 மணியளவில் முதல்வர் விஜய் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா பயணிக்க விஜய் முடிவெடுத்த போது, அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vijay: TN CM Vijay Leaves for Vijayawada Today to Meet AP CM Chandrababu Naidu Over Krishna Water Sharing