சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம்

  • சென்னை: தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவை நடைமுறைகள் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்த புத்தாக்கப் பயிற்சி இன்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் தவெக எம்எல்ஏக்களுக்கு பேரவை எப்படி நடக்கும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்த நிலையில், சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    Advertisement

    புதிய சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால், சட்டப்பேரவையின் நடைமுறைகள், விதிமுறைகள், உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவான பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    எம்எல்ஏக்களுக்கு பயிற்சி

    அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அதில், பேரவையில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம், மசோதாக்கள் மீதான விவாதம், நிதிநிலை அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளது.

    Advertisement

    17-வது சட்டப்பேரவை

    மேலும், மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எவ்வாறு முன்வைப்பது, அரசின் கவனத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது, சட்டமன்ற மரபுகளை எவ்வாறு பின்பற்றுவது போன்ற விஷயங்களும் இந்த பயிற்சியின் முக்கிய பகுதியாக இடம்பெறுகின்றன. 17-வது சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் புதுமுகங்களாக உள்ளனர். இதனால் சட்டமன்ற நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு முழுமையான புரிதலை ஏற்படுத்துவது அவசியமாக கருதப்பட்டது.

    அவை நடவடிக்கைகள்

    பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசியல் அனுபவம் பெற்றவர்களாக இருந்தாலும், அவை நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து தனியான பயிற்சி பெறுவது வழக்கமாக உள்ளது. அதேபோல் இந்த முறை பெரும்பாலான உறுப்பினர்கள் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வந்துள்ளதால், அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    ஜே.சி.டி. பிரபாகர்

    இந்த பயிற்சி குறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு முக்கியமானது என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவை மரபுகள் என்ன, உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

    ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர்

    இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவு பெற்றவுடன், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டமாக இருப்பதால் அரசியல் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கூட்டத்தொடரில் அரசின் புதிய திட்டங்கள், கொள்கை அறிவிப்புகள் மற்றும் பல்வேறு முக்கிய விவாதங்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    English Summary

    CM Vijay launches a two-day training camp for first-time MLAs before the Tamil Nadu Assembly budget session.