சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல் விஜய் மற்றும் தவெக அரசு குழப்பமான நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூரில் ₹27,000 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்ட புதிய விமான நிலையத் திட்டத்தின் எதிர்காலம் குறித்துதமிழக வெற்றி கழக அரசிடமிருந்து தங்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மஜய் தலைமையில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, இந்த பிரம்மாண்ட திட்டத்தின் நிலை என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள சூழலில் மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்
சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத் திட்டம் குறித்து மாநில அரசின் திட்டம் என்ன என்பது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்களா அல்லது தொடரப் போகிறார்களா என்பது எங்களுக்குத் தெரியாது.
இந்த திட்டத்திற்கான நில ஒப்புதலை நாங்கள் ஏற்கனவே கடந்த காலத்திலேயே வழங்கிவிட்டோம். இப்போது மாநில அரசின் கையில்தான் முடிவுகள் உள்ளன. இந்த திட்டத்தின் எதிர்காலம் குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டியது தற்போதைய தமிழக அரசுதான் என்று மத்திய அமைச்சக வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பே, விஜய் பரந்தூர் பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுற்றுச்சூழல் விவகாரங்களை காரணம் காட்டி இந்த திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்பதில் புதிய அமைச்சர்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால், இத்திட்டம் கைவிடப்பட்டு மாற்று இடம் தேர்வு செய்யப்படலாம் என்ற ஊகங்கள் வலுத்துள்ளன. அதே நேரத்தில், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் குழு ஒன்று உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி பெறும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்க திங்கள்கிழமை டெல்லி செல்லவிருக்கிறது. இந்த சந்திப்பில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து விவாதிக்கப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடந்த திமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், மார்ச் 2ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ன் கீழ் ஒரு சிறப்புத் திட்டம் என அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சிறப்புத் திட்டம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும், தவெக அரசு இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ எந்தவிதமான சட்டக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. இத்திட்டத்தைக் கைவிடுவது சென்னைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என தொழில்துறை பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். சென்னை ஏற்கனவே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறையில் அண்டை மாநிலங்களான கர்நாடகா (பெங்களூர் ஏர்போர்ட்) மற்றும் தெலங்கானா (ஹைதராபாத் ஏர்போர்ட்) ஆகியவற்றிடம் தனது இடத்தை இழந்து வருவதாகவும், இந்த நிலையை மாற்ற சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் மிக அத்தியாவசியமானது என்றும் பலரும் வாதிடுகின்றனர்.விஜய் அரசின் நிலைப்பாடு