2029ல் விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவதே ராகுல் காந்தி தான்.. தவெக எம்எல்ஏ கனிமொழி!

  • சென்னை: 2029ல் விஜய் கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவதே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தான் என்று தவெக எம்எல்ஏ கனிமொழி தெரிவித்துள்ளார். 2026ல் எப்படி விஜய் முதல்வரானாரோ, அதேபோல் 2029ல் விஜய் பிரதமராவார் என்று கூறிய கனிமொழி, பிரதமரை தேர்வு செய்யப் போவது தமிழ்நாடு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ள தவெக, அடுத்ததாக தேசிய அளவில் தங்களின் அரசியலை நகர்த்தி வருகிறது. தவெக ஆட்சி அமைத்த நாள் தொடங்கி வடமாநிலங்களில் விஜய் தொடர்பான ரீல்ஸை பரப்பி வருகிறது. வட மாநிலங்களில் இருக்கும் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சர்களை வைத்து விஜய்யின் அதிரடி அறிவிப்புகள் என்ற பாணியில் ஏராளமான பொய் செய்திகளையும் பரப்பி வருகிறது.

    Advertisement

    வட மாநிலங்கள் மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா மாநிலங்களிலும் விஜய்க்கு ஆதரவாக ரீல்ஸ் வெளியிடப்படுகிறது. விஜய்யின் பேச்சும் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அண்மையில் இந்தியா டுடே நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பில் பிரதமர் வேட்பாளருக்கான ரேஸில் விஜய் 3வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    விஜய்க்கு 9.2% ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. அமைச்சர் ராஜேஷ் குமார் நேரடியாகவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், நாங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம். எங்களுக்கு பதவியை விட கட்சியே முக்கியம் என்று அறிவித்தார். இன்னொரு பக்கம் மாணிக்கம் தாகூர், எல்லா கருத்துக்கணிப்பும் உண்மை அல்ல என்று பதிவிட்டார்.

    Advertisement

    அதேபோல் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தனர். ஆனால் தவெக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் தொடர்ச்சியாக விஜய்யை அடுத்த பிரதமர் என்று பேசுவதை குறைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தவெகவின் மன்மத நன்றி புகழ் எம்எல்ஏ கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து தவெக எம்எல்ஏ கனிமொழி பேசுகையில், 2029ல் பிரதமர் வேட்பாளர் விஜய் தான்.. கடந்த 3 நாட்களாக இது மிகப்பெரிய விஷயமாக இருந்து வருகிறது. 2025ல் தமிழக முதல்வர் யார் என்று என்னிடம் கேட்டார்கள். அப்போதும் இதனைதான் கூறினேன். விஜய் முதல்வரானதை நாடே பார்த்தது. 2029ல் பிரதமர் யார் என்று டெல்லியில் இருந்து முடிவு செய்யப் போவதில்லை.

    Advertisement

    தமிழ்நாட்டில் இருந்துதான் முடிவு செய்யப் போகிறோம். இந்த அதிர்ச்சியான இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை நாடே பார்க்கும். 2029ல் நிச்சயம் பார்ப்பீர்கள். அப்போது காங்கிரஸ் கட்சி வெளியில் செல்கிறார்களா, எங்களுடன் இருப்பார்களா என்பதை பார்ப்பீர்கள். விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்ததே ராகுல் காந்தி தான். அவரே தான் விஜய் கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார். இதுதான் நடக்கும். அப்போது தமிழக முதல்வர் யார் என்பதை அப்போது பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Vijay: TVK MLA Kanimozhi Claims Rahul Gandhi Will Help Vijay Become Prime Minister in 2029