விஜய்யின் 100 நாள் ஆட்சி.. சிறப்பாக கொண்டாடப் போகும் தவெக.. ஜெகதீஷ் பழனிசாமியின் பலே திட்டம்?

  • சென்னை: திரைத்துறை சார்பாக முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தவெக ஆட்சியின் 100வது நாளன்று ஒரு விளம்பரப் படத்தை வெளியிடும் திட்டத்தில் இருக்கும் அக்கட்சியினர், அதில் நடிகர், நடிகைகளை பேச வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்று 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். குறிப்பாக முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமியுடன் நெருக்கமாக இருக்கும் பிரபலங்கள் விஜய்யை விரைவாக சந்திக்கின்றனர்.

    Advertisement

    தமிழ் சினிமாவின் இளம் நடிகர்கள், நடிகைகள் பலரும் முதல்வர் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் சீனியர் நடிகர்கள் கொஞ்சம் விலகியே நிற்கிறார்கள். இதனிடையே தவெகவின் ஆட்சியின் 100வது நாளன்று அக்கட்சி சார்பாக விளம்பரப் படம் ஒன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதில் தவெகவுக்கு ஆதரவாக நடிகர்கள், நடிகைகளை பேச வைக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடும் போதுதான் அதற்கு விழா எடுத்து விளம்பரப் படங்கள், பேட்டிகளை வெளியிடுவார்கள். ஆனால் தவெக ஆட்சி அமைத்த 100வது நாளினை கொண்டாட முடிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    அதேபோல் திரைத்துறை சார்பாக முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் இருந்த போது விஜய் செய்த சாதனைகளுக்கும், ஆட்சி அமைத்த பின் செய்த சாதனைகளுக்கும் சேர்த்து இந்த பாராட்டு விழாவை திரைத்துறை நடத்த உள்ளதாக தெரிகிறது.

    வழக்கமாக ஆட்சி முடிவடையும் தருவாயில் தான் இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடைபெறும். தவெக ஆட்சி அமைத்த 3 மாதத்தில் இப்படியான பாராட்டு விழாக்களை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதனால் திரைத்துறையிலேயே சில விவாதங்கள் எழுந்துள்ளன. இதனிடையே தவெகவுக்கு ஆதரவாக விளம்பரப் படங்களில் பேச பல்வேறு தரப்பையும் அணுக தொடங்கி இருக்கின்றனர்.

    English Summary

    Vijay: TVK Plans Special Ad Film Featuring Cinema Celebrities for CM Vijay 100 days of Rule in Tamilnadu