நிதி நெருக்கடி இருந்தாலும் தவெகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.. ஆளுநர் அர்லேகர் உரை!

  • சென்னை: நிதிப் பற்றாக்குறை இருந்தாலும், தவெக அளித்த அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் அர்லேகர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலை கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக கூறியுள்ள ஆளுநர், வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த பின், முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டது. புதிய அரசின் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் தொடங்கியது. அதன்பின் ஆளுநர் அர்லேகர், தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

    Advertisement

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும். தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    மத்திய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப் படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்.. பின்பற்றும். இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது. நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு மேற்கொள்ளும்.

    Advertisement

    டாஸ்மாக்கில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் நிதி தமிழக அரசிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது வரும் நாட்களில் வருவாய் இழப்பை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிதி பற்றாக்குறையை தாண்டி நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Vijay: TVK Promises Will Be Fulfilled Despite Fiscal Deficit says Governor Arlekar on TN's Economic Recovery Plan in Assembly