ப.சிதம்பரம் மூலம் காய் நகர்த்திய விஜய்.. எதிர்பார்க்காத ராகுல்! தவெக மீது அதிருப்தி!

  • டெல்லி: தமிழகத்தின் முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் லிஸ்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்த நியமனம் குறித்து முன்கூட்டியே ராகுல் காந்திக்கு தெரியவில்லை. இதனால், காங்கிரஸ் மேலிடம் தவெக அரசு மீது அதிருப்தியில் இருக்கிறது.

    Advertisement

    வழக்கமாக தேசிய காங்கிரஸின் முடிவுகளுக்கு ஏற்பதான் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல்படும். கமிட்டியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகிறது என்றாலும், அது முன்கூட்டியே தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்படும். ஆனால் தவெக, தமிழக காங்கிரஸ் கமிட்டி விவகாரத்தில் இப்படி நடக்கவில்லை.

    Advertisement

    சிதம்பரம் நியமனம் குறித்து அரசாணை வெளியான பின்னர்தான், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இது பற்றி ராகுல் காந்தியிடம் தெரிவித்திருக்கிறார். விஷயத்தை கேட்ட ராகுல், "நியமனம் பற்றி ப.சிதம்பரத்துக்கு முன்னாடியே தெரியுமா" என கேட்டிருக்கிறார். விசாரித்து சொல்வதாக சொன்ன வேணுகோபால்.. ப.சிதம்பரத்திடம் கேட்க.. "அரசாணை வந்த பின்னாடிதான் எனக்கே தெரியுமுங்க" என்று சிதம்பரம் சொல்ல.. ஆனால், இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என்பது சிதம்பரம் தரப்பினரிடையே விசாரிக்கும்போது தெரிய வந்திருக்கிறது.

    இதை ராகுலிடம் வேணுகோபால் சொல்ல.. அவர் டென்ஷன் ஆகியிருக்கிறார். மேலிடத்திற்கு சொல்லாமல் எப்படி தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுகிறது? என்று கேள்வி கேட்டிருக்கிறாராம்.

    Advertisement

    ஆனால், இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்தான். தமிழக அரசுக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் வெயிட் கை தேவைப்படுகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர், உள்துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் ப.சி இருந்திருக்கிறார். எனவே அவரை சரியான இடத்தில்தான் நியமித்திருக்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    ஏற்கெனவே பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் தவெகவுக்கும், காங்கிரஸுக்கும் மோதல்கள் வெடித்திருக்கின்றன. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் சொல்ல.. அதெல்லாம் இல்லை, விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்று தவகெவினர் சொல்ல.. இரு தரப்பும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு இடையில், தவெகவினர் ரசிக மன நிலையில் இருக்கின்றனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியிருந்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vijay used P. Chidambaram: Senior Congress leader P. Chidambaram's name has been included in the list of lawyers representing Tamil Nadu in key cases before the Supreme Court. Rahul Gandhi was not informed of this appointment in advance; consequently, the Congress high command is displeased with the TVK government.