திருச்சி கிழக்கில் திரிஷா போட்டியிடலாம்.. அதுல என்ன தப்பு இருக்கு? ஓபனாக பேசிய காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்

  • சென்னை: நடிகை திரிஷா திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ளார். தவெக சார்பில் நிறுத்த விரும்பினால் அது அவர்களின் முடிவு என்றும் விஜய் வசந்த் கூறியுள்ளார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றி பெற்ற நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காலியான அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    Advertisement

    திரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது

    நீதிமன்ற வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால், இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ளது. எனினும், நீதிமன்ற தடை நீங்கினால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இது ஒருபக்கம் இருக்க, திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு துவக்கம் முதலே இருந்து வருகிறது.

    திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை முதல்வர் விஜய் போட்டியிட்ட தொகுதி என்பதால், இந்த தொகுதியில் யார் களமிறக்கப்படுவார்கள்? என்ற விவாதம் தவெகவினர் மத்தியிலும் அரசியல் களத்தில் அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. இந்த சூழலில்தான், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், திருச்சி கிழக்கு தொகுதியில் திரிஷா போட்டியிட்டாலும் என்ன தவறு இருக்கிறது? என்று பேசியுள்ளார். இது குறித்து விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    அவர்களது தனிப்பட்ட விருப்பம்

    நடிகை திரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். திரிஷாவை தவெக வேட்பாளராக நிறுத்த விரும்பினால் அது அவர்களின் முடிவு. அதை யாரும் எதிர்க்க முடியாது. விஜய் அண்ணனுடன் சினிமாவில் நடித்தவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பலாம். திரைத்துறையை சேர்ந்த இன்னும் நிறைய பேர் அரசியலுகு வர வாய்ப்பு உள்ளது" என்றார்.

    தனது எக்ஸ் தளத்தில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் தனது பேட்டியை பகிர்ந்துள்ளார். முதல்வர் விஜய் உடன் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தோன்றும் நடிகை திரிஷா தற்போது படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளார். இப்போதும் கூட லண்டனில் படப்பிடிப்பில் முகாமிட்டுள்ளார். முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள நிலையில், அங்கு நடிகர் அஜித்குமாரின் கார் ரேசை நேரில் சென்று பார்த்தார்.

    Advertisement

    உங்களில் ஒருவரை நிறுத்துவதாக விஜய் பேச்சு

    அப்போது, அஜித்தின் கார் ரேசை பார்க்க திரிஷாவும் வந்து இருந்ந்தார். பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் திரிஷாவின் பெயர் சமீப காலமாக அரசியல் வட்டாரத்திலும் அதிகம் இழுத்து பேசப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர், திருச்சி கிழக்கில் திரிஷாவை தவெக வேப்டாளாராக நிறுத்தக்கூடும் என்று தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்கள்.

    அரசியல் களத்தில் திரிஷாவை இழுத்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில்தான், விஜய் வசந்த் தனது பேட்டியில், திருச்சி கிழக்கில் அவர் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசியுள்ளார். திருச்சி கிழக்கு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திருச்சி கிழக்கில் உங்களில் ஒருவர்தான் வேட்பாளராக நிறுத்த போகிறோம் என்று கூறியிருந்தார்.

    English Summary

    Vijay Vasanth, Congress MP has stated that there is nothing wrong with actress Trisha contesting from the Trichy East constituency, noting that in a democracy, anyone can contest an election as it is their personal choice. He added that it would be her decision if she wished to contest representing TVK.