அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்!

  • சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வராக இருப்பார் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். எந்த அமைச்சர் தவறு செய்தாலும் அடுத்த நொடியே அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று கூறியுள்ள ஆனந்த், எந்தக் காரணம் கொண்டு நாங்கள் தவறு செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பனையூர் தவெக அலுவலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன், முன்னாள் எம்எல்ஏ ரவி உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    அதேபோல் திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். இவர்களை அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சால்வை போர்த்தி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் பேசுகையில், மாற்று கட்சியில் இருந்தவர்களை மரியாதை குறைவாக நடத்திவிடக் கூடாது என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    உங்களுக்கு உண்டான பதவிகள், மரியாதைகள் விரைவில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்து கொடுக்கப்படும். அதனை விஜய் முடிவு செய்வார். 2026ல் விஜய் முதல்வராகுவார் என்று 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருந்தோம். அதேபோல் ஒவ்வொரு நபரும் வாக்களித்து ஆட்சியில் விஜய்யை அமர வைத்துள்ளார்கள். எந்த காரணம் கொண்டு நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம்.

    Advertisement

    அப்படி தவறு செய்தால், விஜய் அடுத்த வினாடியே பதவியில் இருக்கவிட மாட்டார். அவர்தான் தமிழக முதல்வர்.. மக்களின் தேவைகள் என்பதை சொன்னால் உடனடியாக நாங்கள் தீர்த்து வைப்போம். நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம். தவெக நிர்வாகிகளுடன் இணைந்து மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் செயல்பட வேண்டும்.

    30 ஆண்டு காலமாக தவெக தோழர்கள் விஜய்க்காக உழைத்திருக்கிறார்கள். தவெகவினர் துடுக்குத்தனத்துடன் வார்த்தைகள் விட்டுவிடக் கூடாது. நிச்சயமாக அனைவருக்கும் தவெகவில் வாய்ப்பு கிடைக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் இருப்பார். ஊழல், கட்சி நிதி என்பதெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. விஜய் அப்படிதான் எங்களை வழிநடத்தி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Vijay: Vijay Will Be CM For the Next 20 Years says Minister Bussy Anand Makes Bold Prediction on TVK Chief’s Political Future