உங்க அப்பா இருப்பாருனு சொன்னாங்க.. ஸ்டாலின் தோல்வியை நக்கல் அடித்து உதயநிதியை சாடிய விஜய்!

  • சென்னை: சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் அடைந்த தோல்வியை நக்கல் அடித்து முதல்வர் விஜய் பேசி இருக்கிறார். சட்டசபையில் திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், ஒரு குட்டிக் கதை ஒன்றை கூறி, உங்கள் அப்பா இங்க இருப்பாருனு சொன்னாங்க.. உங்க அப்பாவை காணோமே என்று விஜய் பேசினார். இதனை பேசி முடித்துவிட்டு, எங்களுக்கும் நக்கல் செய்ய தெரியும் என்று தெரிவித்தார்.

    Advertisement

    முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அன்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இதன்பின் திமுக மற்றும் தவெக எம்எல்ஏ-க்கள் இடையே கடுமையான விவாதம் நடந்தன. இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதில் உரை வழங்கினார்.

    Advertisement

    இந்த பதிலுரையின் போது முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தோல்வியை நக்கல் அடித்து முதல்வர் விஜய் பேசியதும், அவரை போலவே ஆக்‌ஷன் செய்தும் காட்டி இருக்கிறார். இதில் விஜய் பேசும் போது, Party Fund என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதனால் தவெக மற்றும் திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

    தொடர்ந்து முதல்வர் விஜய் பேசுகையில், மக்களால் நிராகரிக்கப்பட்டு மக்களால் அகற்றப்பட்டவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேம். தப்பே செய்ய மாட்டோம் என்று சொல்பவர்களால் தான் கூட்டணி ஆட்சி அமைக்க முன் வர முடியும். ஊழலில் ஊறிப் போனவர்களால் ஆட்சியில் பங்கு அளிக்க முடியாது. நிதிநிலையை சரி செய்யவே தவெக ஆட்சி அமைத்த பின் நேரம் கேட்டோம்.

    Advertisement

    சபையில் இல்லாதவர்களை பற்றி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். நக்கல், நய்யாண்டி என்று பேசிவிட்டு, முதல்வருக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்கிறார்கள். சோஃபா மாடல் ஆட்சி என்கிறார்கள்.. அது புரிவதற்கே ரொம்ப நாளாகிவிட்டது. ஃபர்னிச்சர் தொழிலை வேறு எங்காவது சென்று செய்ய சொல்லுங்க.. ஒரு குட்டிக் கதை நியாபகம் வருகிறது.

    ஒரு ஊரில் ஒரு பெரியவர்.. வெயில் அதிகமாக இருக்கிறது என்று கண்ணுக்கு மேல் கை வைத்து கொண்டு சுத்தி தேடி கொண்டிருந்தாராம்.. அப்போது கூட நின்ற சின்னப் பையன் என்ன தேடிட்டு இருந்தீங்க என்று கேட்டானாம்.. அதற்கு அவர், ஒன்னுமில்லைடா தம்பி.. உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.. எங்க உங்க அப்பாவையே காணோம்.. என்றாராம்..

    Advertisement

    எங்களுக்கும் நக்கலாக, நய்யாண்டியாக பேச தெரியும்.. அந்த கதையில் பெரியவர் அப்படி கேட்டாராம்.. யாரும் டென்ஷனாக வேண்டாம்.. 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடிருச்சு.. பேசு பேசுனா என்ன பண்றது என்று தெரிவித்தார். இதனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரடியாகவே விஜய் நக்கல் செய்திருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலினை சாடி இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijay: Where is Your Appa? CM Vijay Takes a Dig at Stalin’s Poll Defeat in Assembly, Recounts Kutti Story as DMK Walks Out