விஜயபாஸ்கரை கண்டுக்காத விஜய்.. சிங்கை ராமச்சந்திரனை மட்டும் நேரடியாக சந்தித்தது ஏன்? தவெக திட்டம்!

  • சென்னை: அதிமுகவின் முக்கிய நிர்வாகியான சிங்கை ராமச்சந்திரன் நேரடியாக முதல்வர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்த போது, அது தவெக தலைமையால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சிங்கை ராமச்சந்திரனுக்கு மட்டும் இந்த பாலிசியில் மாற்றம் ஏற்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும், மாணவரணி நிர்வாகியும் செயல்பட்டு வந்தவர் சிங்கை ராமச்சந்திரன். 1991 முதல் 1996 வரை கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த கோவிந்தராஜனின் மகன் தான் சிங்கை ராமச்சந்திரன். 18 வயதிலேயே அதிமுகவில் இணைந்த அவர், 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவின் கோவை தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    Advertisement

    இதன்பின் சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் அதிருப்தியுடன் பயணித்து வந்தார். கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் அதிருப்தி அடைந்த சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து கடிதம் வெளியிட்டார். தற்போது முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.

    தவெக ஆட்சி அமைத்த பின், அதிமுகவில் இருந்து வருவோரின் எண்ணிக்கையை உச்சத்தில் உள்ளது. சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வைகைச் செல்வன், வளர்மதி, இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் உள்ளிட்ட ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் வந்தனர்.

    Advertisement

    அவர்கள் யாராலும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் இணைய முடியவில்லை. முதல்வர் விஜய் முன்னிலையில் தான் இணைவேன் என்று விஜயபாஸ்கர் எவ்வளவோ பிடிவாதம் பிடித்த போதும், தவெக தலைமை இறங்கி வரவில்லை. இறுதியாக கட்சியில் இணைந்த ஒரு வாரம் பின்னரே, பனையூர் அலுவலகத்தில் அவர்களை வரவேற்றார்.

    ஆனால் சிங்கை ராமச்சந்திரன் மட்டும் நேரடியாக விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கிறார். இதுதான் அதிமுக மாஜிக்கள் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது. இதன் பின்னணியில் சிங்கை ராமச்சந்திரனின் படிப்பும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம் பட்டதாரி. இந்தியாவின் மிக முக்கிய தொழில் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

    Advertisement

    38 வயதான சிங்கை ராமச்சந்திரனை தவெக தலைமையே நேரடியாக அணுகி இருக்கிறது. இதன் காரணமாகவே அவரும் தவெகவில் இணையலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிங்கை ராமச்சந்திரனுக்கு விரைவில் ஸ்டார்ட்அப் டிஎன் அமைப்பின் சிஇஓ பதவி அளிக்கப்பட உள்ளதாகவும் சில தகவல் வெளியாகி இருக்கிறது.

    English Summary

    Vijay: Why Singai Ramachandran Got the Exception, CM Vijay Welcomes Ex-AIADMK Leader After Denying Others