ஸ்டாலினை பார்த்தீங்களே! விஜயகாந்த் சமாதிக்கு ஏன் வரவில்லை? முதல்வர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி

  • சென்னை: முதல்வர் விஜய் ஏன் விஜயகாந்த் சமாதிக்கு வரவில்லை? "உங்க அப்பாவை காணோம்னு" சொல்லிவிட்டு ஸ்டாலினை போய் பார்த்தீர்களே! உங்களை வளர்த்த கேப்டனை ஏன் பார்க்கவில்லை என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    அனகாபுத்தூரில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசுகையில், "தவெக என ஏதாவது பதிவிட்டாலே போதும் என்ன ஏது என படிக்காமலேயே சண்டைக்கு ஓடி வருகிறார்கள். செந்தூர பாண்டி என வளர்த்துவிட்டதே கேப்டன். அப்படியிருக்கும் போது விஜய் அண்ணன் மீது எங்களுக்கு என்ன பொறாமை?

    Advertisement

    விஜய் நன்றாக பெரிய அளவில் வரட்டுமே, எங்களுக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தப்பை திருத்தி சொல்வது கேப்டனின் வளர்ப்பு. நாங்கள் தவறை தட்டிக் கேட்போம். அதை யாரும் கேட்க உரிமை இல்லை.

    நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைப்போம். அது குறித்து பேச வேண்டிய தகுதி யாருக்கும் இல்லை. எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை கேட்டுத்தான் கூட்டணி விவகாரங்களில் பிரேமலதா விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளார். அது பழைய பிரச்சினை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

    தவெகவுடன் தேமுதிக கூட்டணி சேரவில்லை என நிறைய தவெக தொண்டர்கள் கோபப்படுகிறார்கள். நான் உங்களிடம் ஒரே கேள்வி கேட்கிறேன். முதல்வராக பதவியேற்ற பிறகு எல்லா அரசியல் கட்சி தலைவர்களை விஜய் அண்ணா போய் பார்த்தாரே, அது போல் தேமுதிக அலுவலகத்திற்கு அவர் வர வேண்டாம், பிரேமலதா விஜயகாந்தை பார்க்க வேண்டாம், கேப்டன் சமாதிக்கு போனாரா?
    பெரியார் சமாதிக்கு சென்றார், விஜயகாந்த் சமாதிக்கு சென்றாரா? என தவெக தொண்டர்களை கேட்கிறேன்.

    Advertisement

    எங்களையோ, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தையோ சந்திக்க வேண்டாம். "உங்கள் அப்பாவை காணோம்"னு சொல்லிவிட்டு ஸ்டாலினையே போய் பார்த்தீர்களே! உங்களை வளர்த்த கேப்டனை பார்த்தீர்களா? என விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நடிகர் விஜய்யை நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். முன்னதாக வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமாகியிருந்தார்.

    இந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியை தந்தது. இதையடுத்து விஜய்யை ஹீரோவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போதைய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜயகாந்தை செந்தூரபாண்டி படத்தில் விஜய்க்கு அண்ணனாக கவுரவ வேடத்தில் நடிக்க விஜயகாந்த், எஸ்ஏ சந்திரசேகரிடம் கேட்டார்.

    Advertisement

    அப்போது விஜயகாந்த் ஒப்புக் கொண்டாராம். இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகரே ஒரு முறை, "விஜய்யை மாஸ் ஹீரோவாக்க நினைக்கிறேன். அதற்கு நீங்கள் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஓப்பனாக கேட்டேன். அப்போது பீக்கில் இருந்த விஜயகாந்த் தனக்காக கதை கேட்காமல் எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் எனக் கேட்டு ஒப்புக் கொண்டார்" என கேட்டதாக கூறினார். செந்தூரப்பாண்டி படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.

    விஜயகாந்த் மறைவுக்கு கூட விஜய் கண் கலங்கினார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அவர் மீண்டும் அவரது முகத்தை பார்த்துவிட்டுச் சென்றார். இந்த நிலையில் விஜய் ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீடு, விசிக தலைவர் திருமாவளவன் அலுவலகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீடு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள், ஐயூஎம்எல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றிருந்தார். ஆனால் விஜயகாந்த் நினைவிடத்திற்கும் செல்லவில்லை, பிரேமலதா விஜயகாந்தையும் அவர் சந்திக்கவில்லை. இது ஏன் என தெரியவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்லாமல் அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களை சி.வி.சண்முகம் வீட்டில் சந்தித்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    DMDK Vijaya prabhakaran asks CM Vijay that why he didnt visit Vijayakanth memorial? despite he met all political leaders like Stalin.