கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி

  • சென்னை: பாஜகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி விலகி, தவெகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜயதரணி பாஜகவில் இணைந்தார். ஆனால் பாஜகவில் இணைந்த நாள் முதலே விஜயதரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எந்தவித கட்சிப் பொறுப்பும் அளிக்காததால் அதிருப்தியில் இருந்து வந்த விஜயதரணி, தற்போது தவெகவில் இணைந்திருக்கிறார்.

    Advertisement

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு விஜயதரணி வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி, கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார்.

    Advertisement

    டெல்லிக்குச் சென்று பாஜகவின் தேசியத் தலைவர்கள் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவர் விலகியதால் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. காங்கிரஸின் முக்கிய பெண் முகமாக இருந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ பதவியைத் தூக்கி எறிந்துவிட்டுப் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பாஜகவில் இணைந்தார்.

    ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, பாஜகவில் இணைந்த நாள் முதலே அவருக்குக் கட்சியில் எந்தவொரு முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எதிலுமே அவருக்குப் போட்டியிட வாய்ப்போ அல்லது மாநில அளவில் எந்தவொரு முக்கியக் கட்சிப் பொறுப்போ வழங்கப்படவில்லை.

    Advertisement

    2011 முதல் 2024 வரை விளவங்கோடு எம்எல்ஏ-வாக இருந்தார். லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து பாஜகவில் ஐக்கியமானவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2026 சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் விஜயதரணி பனையூர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து தவெகவில் இணைந்திருக்கிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதோடு, விஜயதரணியும் இணைந்திருக்கிறார். இதனால் வரும் நாட்களில் தவெக கன்னியாகுமரியில் மிகப்பெரிய செல்வாக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijayadharani: Former MLA Vijayadharani Set to Quit Saffron Party and Join Vijay’s TVK