50 நாள் முதலமைச்சர் விஜய்.. தவெகவிடம் சிக்கிய அந்த ஆதாரம்.. இனிதான் சிக்கலே

  • சென்னை: விஜய் முதலமைச்சராகி 50 நாள் தான் ஆகிறது.. அதற்குள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? நியாயப்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமிதான் இந்த அளவிற்குத் கோபப்பட வேண்டும். ஏறக்குறைய அண்ணா திமுகவை பாதி அளவிற்கு வழித்துக்கொண்டு தவெகவுக்கு வந்துவிட்டார்கள், அவரே அமைதியாக இருக்கும்போது, 50 நாட்களுக்குள் இவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள்" என்று திமுகவை சாடியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

    Advertisement

    ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "ஒரு குதிரை பேரம் நடந்தது உண்மை என்று தெரிகிறது. அதை நடத்தியவர் செந்தில் பாலாஜி என்று இப்பொழுது குற்றம் சாட்டி, காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டியவர் ஆஜராகவில்லை. அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள். இது எவ்வளவு பெரிய அவமானம் பாருங்கள்!

    Advertisement

    இப்படி தந்துவிட்டால், விமான நிலையம், ரயில், சாலை மார்க்கமாகக் கூட வேறு நாட்டிற்குச் செல்ல முடியாது. நீங்கள் ஒரு விஐபி. நாங்கள் ஊழலே செய்யவில்லை, பேரமே பேசவில்லை என்று திமுக தரப்பினர் சொல்லும்பொழுது, பிறகு ஏன் பயப்பட வேண்டும்?

    50 நாள் முதலமைச்சர் விஜய்

    நியாயப்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமிதான் இந்த அளவிற்குத் கோபப்பட வேண்டும். ஏறக்குறைய அண்ணா திமுகவை பாதி அளவிற்கு வழித்துக்கொண்டு இங்கு வந்துவிட்டார்கள், அவரே அமைதியாக இருக்கும் பொழுது, நீங்கள் எடுத்த உடனே 50 நாட்களுக்குள், 50 நாட்கள் கூட இல்லை, கிட்டத்தட்ட 15 நாட்களில் இருந்தே கொந்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    Advertisement

    ஒவ்வொரு திருமண வீட்டிற்குச் சென்று பயங்கரமாகப் பேசுவது என்னவென்றால்... விஜய் என்ற ஒரு நபர் உள்ளே வந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டாரே என்பதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

    நடத்தப்பட்ட குதிரை பேரம்

    திமுக போன்ற பெரிய கட்சியின் மீது குற்றம் சாட்டும்போது போதிய ஆதாரம் இருக்க வேண்டும். அதை வைத்துத்தான் இப்பொழுது செந்தில் பாலாஜியை ஆஜராக வைக்க முடியாமல், பிடிக்கவே முடியவில்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட தவெக தரப்பில் 180 கோடி ரூபாய் வரை பேரம் பேசியிருக்கிறார்கள். விஜய் இந்த நாற்காலியில் அமர்ந்து 50 நாட்கள்தான் ஆகிறது, அதற்குள் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது மீண்டும் மீண்டும் விஜய்க்கு சாதகமாகத்தான் மாறும்.

    Advertisement

    விளிம்பு நிலை மனிதர்கள்

    தவெக தரப்பில் 25 முதல் 30 பேரிடம் பேசியிருப்பதாக சொல்கிறார்கள். இப்பொழுது தவெகவில் இருக்கிற 107 சட்டமன்ற உறுப்பினர்களும் மிகவும் சாமானியர்கள். சலூன் கடை வைத்திருந்தவர், ஆட்டோ டிரைவர், பட்டியலின மக்கள் என விளிம்பு நிலை மனிதர்கள் ஆவர். ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் மட்டும்தான் தேர்தல் செலவு செய்துள்ளேன் என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் சொல்லியிருக்கிறார்.

    ஆனால் மற்ற 2 கட்சிகளும் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு மறுபடியும் 6 மாதத்தில் தேர்தல் நடத்தினால் அது தவெகவுக்கு பெரும்பான்மையாக அமைந்து, அவர்களுக்குத்தான் சாதகமாக மாறும். இதை நான் அவர்களின் பிஆர்ஓ-வாகப் பேசவில்லை, இதுதான் கள எதார்த்தம்.

    Advertisement

    சிக்கிய பெரிய ஆதாரம் என்ன

    ஏதோ பெரிய ஆதாரம் தவெக தரப்பில் சிக்கியிருக்கிறது, அதை இன்னும் அவர்கள் வெளியிடவில்லை. அதனால்தான் இவர்கள் திகைத்துப் போய்க் கொந்தளிக்கிறார்கள். பணத்திற்கு மயங்காதவர்கள் யார்? லட்சங்களையே பார்த்திராத மனிதர்கள் அவர்கள். ஆனால் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், "நாங்கள் எங்களைப் பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை, விஜய் என்ற ஒற்றை முகத்தைப் பார்த்துதான் வாக்களித்தார்கள். தலைமைக்குக் கட்டுப்படுவோம்" என்று மிகவும் உறுதியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறார்கள்.

    இந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஒரு பெண்ணிற்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தவறு செய்துவிட்டார் என்று 15 நாட்களாகப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். ஆனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அவர் மீது ஒரு சாப்ட் கார்னர் வரவேண்டும் என்று இந்த குதிரை பேர விஷயத்தைக் கையில் எடுப்பதாக தெரிகிறது.

    Advertisement

    ரஜினிகாந்த் என்ன சொன்னார்

    ஆனால் 50 நாட்களுக்குள்ளேயே உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே, ஒரு 6 மாதம் ஆட்சி செய்துதான் பார்க்கட்டுமே! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே அவகாசம் கொடுங்கள் என்றுதான் கூறினார். விளையாட விட்டுப் பாருங்களேன். தவறுகள் செய்யாமல் யாராலும் அரசியல் செய்ய முடியாது, எப்படியாவது ஒரு தவறு நடக்கும்போது அரசியல் செய்யுங்கள். ஆனால் இவர்களால் அமர முடியவில்லை, எதிர்பாராத ஒரு நபர் வந்து அமர்ந்துவிட்டார் என்ற கோபம்தான் இது.

    ஆரம்பத்திலிருந்தே அமைச்சர்களைக் குறிவைக்கிறார்கள். சரத் என்பவரின் பழைய வீடியோவைப் போட்டு எதிர்ப்பைக் கிளப்புகிறார்கள். ஆனால் தவெக அரசு இதைப் பற்றிப் பேசாமல் அமைதியாக இருக்கிறது. ஏனெனில் ஒரு தவறு நடக்கும் பொழுது பொதுமக்கள் கேள்வி கேட்பார்கள். ஒட்டுமொத்த சமூக ஊடகமும் தவெகவிடம் மட்டும் இல்லை, பொதுமக்கள், ஐடி விங் என எல்லார் கையிலும் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

    English Summary

    Vijay's 50-Day Chief Minister Claim! Evidence Found by TVK Sparks Fresh Questions