“இன்னைக்கு மட்டும் டைமுக்கு போக தெரிஞ்சதா?” முதலமைச்சர் விஜய்க்கு.. சிவசங்கர் சரமாரி கேள்வி

  • சென்னை: கரூருக்கு அன்றைக்கு தாமதமாக சென்ற முதல்வர் விஜய், இன்று மட்டும் நேரத்திற்கு போக தெரிந்ததா? என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    முதல்வர் விஜய் இன்று கரூர் சென்று, நெரிசலில் பலியான குடும்பத்தினரை சேர்ந்தவர்களுக்கு நேரில் சந்தித்து அரசு வேலைக்கான உத்தரவை வழங்கியிருந்தார். அப்போது மக்களிடையே பேசிய விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இப்படி இருக்கையில் தற்போது சிவசங்கர் சரமாரியான கேள்வியை அடுக்கியிருக்கிறார்.

    Advertisement

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர் பேசியதாவது, "காவல்துறையை குற்றம்சாட்டி விஜய் பேசியிருக்கிறார். ஆட்சி மாறினாலும் காவல்துறை என்பது மாறாதது. அப்படி இருக்கையில் காவல்துறையை விமர்சித்து விஜய் பேசியிருக்கிறார்.

    தன் முதுகில் உள்ள கரையை மறைக்க காவல்துறையை கை காட்டுகிறார் அவர். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது, கரூர் போக தடை போட்டார்கள் என்று சொன்னீர்களே! உங்கள் ஆட்சி அமைந்தும் கரூர் போக 2 மாதங்கள் எடுத்துக்கொண்டது ஏன்?

    கரூர் சம்பவத்திற்கு பிறகு, கடந்த ஆண்டு டிச.27ம் தேதி மலேசியாவில் நடைபெற்ற ஜன நாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு உற்சாகமாக நடனமாடியிருந்தீர்கள். அதேபோல, கடந்த பிப்.9ம் தேதியன்று ஒய்.எஸ்.சுனில் ரெட்டியின் இல்ல திருமண விழாவிலும், மார்ச் 5 அன்று திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தீர்கள். இதுபோக, உங்கள் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடினீர்கள்.

    Advertisement

    இதையெல்லாம் செய்துவிட்டு, உங்கள் மனதில் இருந்த காயத்தையும், வலியையும் கரூர் வந்துதான் ஆற்றுகிறேன் என.. ரொம்ப டீ ஆத்துகிறீர்கள்.

    அதேபோல கரூரில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று பேசியிருக்கிறீர்கள். உண்மையான நினைவு சின்னம் எது தெரியுமா? திருச்சி விமான நிலையத்தில் சார்.. சார் என்று பத்திரிகையாளர்கள் கத்தினார்களே! அப்போதும் திரும்பி பார்க்காமல் போனீர்களே அதுதான்" என்று சிவசங்கர் பேசியிருக்கிறார்.

    English Summary

    Vijays Karur Visit: Former DMK Minister Sivasankar has sharply questioned how Chief Minister Vijay, who arrived late in Karur on that occasion, managed to arrive on time today.