தூய சக்தி இமேஜ் உடையுதே! விஜய் உஷாரா இருக்கணும்.. அடுத்தடுத்து வரும் பஞ்சாயத்து!

  • சென்னை: "உங்க கிட்ட வந்த யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று தைரியமாக நோ சொல்லி.. என் பெயரை சொல்லுங்கள்" என்று முதல்வர் விஜய் பேசி முழுசா ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீராசாமியின் லஞ்ச வீடியோ, சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது விஜய் உஷாராக இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    திமுக ஆட்சியில் ஊழல் தலை விரித்து ஆடியதாகவும், அந்த ஆட்டத்தை கட்டுப்படுத்தவே தான் அவதரித்துள்ளதாகவும் விஜய் கூறியிருந்தார். என்னுடைய ஆட்சியில் லஞ்சம் என்கிற வார்த்தைக்கே இடமில்லை என்றும் கூறியிருந்தார். இப்படி இருக்கையில்தான், வீராசாமியின் லஞ்ச வீடியோ வெளிச்சத்திற்கு வந்தது.

    Advertisement

    என்ன நடந்தது?

    செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் நவீன் என்கிற அரசு ஒப்பந்ததாரர், ரூ.9.80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலையை அமைத்திருந்தார். ஆனால், இந்த பணிகள் முடிவடைந்த பின்னரும் கூட.. பணிக்கான பணம் வரவில்லை. இந்த தொகை விடுவிக்கப்பட ரூ.1.30 லட்சத்தை வீராசாமி லஞ்சமாக பெற்றதாக வீடியோ வெளியானது. இது கைமாற்றாக பெறப்பட்ட பணம் என்று வீராசாமி விளக்கமளித்தாலும்.. உண்மை வெளியே வந்ததால், தற்போது அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

    அமைச்சர்கள் லிஸ்ட்

    வெளியில் தெரிந்தது ஒரு வீராசாமிதான். ஆனால், பல துறைகளில் ஊழல் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது என்று ஒப்பந்ததாரர்கள் புலம்பியிருக்கின்றனர். தவெக ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, ஒட்டுமொத்த ஒப்பந்ததாரர்களிடையே பெரிய சந்தேகம் இருந்தது. இதற்கு முன்னர் இருந்ததை போல இப்போதும் அரசு நிர்வாகம் இருக்குமா? அல்லது உண்மையான மாற்றம் ஏற்படுமா? என்பதுதான் அந்த சந்தேகம். விஜய் மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசி, கமிஷன், கரப்ஷன் இருக்காது என்று உறுதியளித்திருந்தார்.

    Advertisement

    அதிகாரிகளின் ஆட்டம்

    எனவே மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று அனைத்து தரப்பினரும் நம்பினர். இருப்பினும் பால்வளத்துறை தொடங்கி பல துறைகளில் ஒப்பந்ததாரர்களிடையே கமிஷன் பெரும் நடைமுறை நீடிக்கிறது என்று புலம்பல்கள் தொடங்கியிருக்கின்றன. இது தொடர்பான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வர தொடங்கியிருக்கின்றன. விஷயம் பப்ளிக்காக தெரிவதற்கு முன்னரே பல்வேறு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    உஷாரா இருக்கனும்

    இதையெல்லாம் பார்க்கும்போது முதல்வர் விஜய் உஷாராக இருக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்க தொடங்கியிருக்கின்றனர். விஜய் என்னமோ லஞ்சம் வேண்டாம்தான் என்கிறார்.. ஆனால் தனது அமைச்சரவையில் என்ன நடக்கிறது? என்பதை அறிந்து.. அது பெரிய பிரச்சனையாக வெடிப்பதற்கு முன்னரே தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    Topics: #vijay #tvk

    English Summary

    Vijay: the Mambakkam Panchayat President and TVK’s Chengalpattu East District Joint Secretary, accepting a bribe went viral on social media. Observing these events, various quarters have warned that Vijay needs to be vigilant.