ஹோட்டலில் ரூமில் நுழைந்த புதுப்பெண்.. சிசிடிவியில் சிக்கிய காட்சி.. ரயில்வே தேர்வுக்கு ரெடியானவராமே

  • லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணமாகி 4 மாதங்களே ஆன இளம் பெண், கணவருடன் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த எதிர்பாராத சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்படி என்னதான் நடந்தது?

    Advertisement

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் முஸ்கான் (28). இவருக்கும் மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவை சேர்ந்த நிலேஷ் என்பவருக்கும் கடந்த ஜூன் 29-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சுமார் 4 மாதங்களே ஆன நிலையில், 2 பேரும் ஜான்சியில் உள்ள ரிஷப் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

    Advertisement

    ஜான்சி புதுப்பெண்

    அக்டோபர் 26-ம் தேதி காலை சுமார் 10.50 மணியளவில், ஹோட்டல் ரூமிலிருந்து வெளியேற தயாரானபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான 47 விநாடிகள் கொண்ட சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.

    அந்த காட்சியில், கணவர் உள்ளிட்ட 2 பேர் முதலில் அறைக்குள் செல்கிறார்கள்.. பின்னால் வந்த முஸ்கான் அறையின் வாசலை நெருங்கியதும் திடீரென நிலைதடுமாறி கீழே விழுகிறார். உடனே அவரது கணவர் அவரைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் செல்கிறார்.

    இதற்கு பிறகு ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் முஸ்கானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து ஜான்சி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    முஸ்கானின் இறப்பு

    முஸ்கானின் இறப்பு செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே முஸ்கனின் அப்பா, ராம்ஜி லால் அஹிர்வார் போலீசுக்கு ஓடிச்சென்று புகார் அளித்தார்..

    "என் மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.. என் மகளை, கணவர் ஏமாற்றி ஹோட்டலுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. நிலேஷுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது.. அவரது முதல் மனைவி இந்தூரில் வசித்து வருகிறார்..

    ஹோட்டலில் நடிகையுடன் ஒன்றாக இருந்த பிரபல நடிகர்.. எந்த மனைவியும் பார்க்க கூடாத காட்சி! வெளிவந்த ரகசியம்

    மகளின் மர்ம மரணம்

    ஆனால் அந்த விவரத்தை மறைத்துவிட்டு, என் மகள் முஸ்கானை திருமணம் செய்து கொண்டார்.. திருமணத்துக்கு பிறகு இந்த விவகாரம் தொடர்பாக, என் மகளுக்கும், கணவனுக்கும் இடையே நிறைய பிரச்சனைகளும், தகராறுகளும் இருந்து வந்தன.. என் மகளின் தலையில் காயங்களும் உள்ளன.. இப்போது திடீரென என் மகள் மயங்கி இறந்துவிட்டதாக சொல்வதை ஏற்கமுடியவில்லை

    Advertisement

    ஹோட்டல் ரூம் வாசலில் முஸ்கான் பின்னால் சரிந்து விழும்போது, தலை தரையில் மோதுவது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. முஸ்கானின் தலையில் காயங்கள் இருந்தன.. அதனால் அவரை யாராவது தாக்கியிருக்கலாம்" என்று போலீசில் புகார் தந்தார்.

    ஹோட்டலில் ரூ.230.. ஸ்விக்கியில் ரூ.436! ஒரே உணவுக்கு கிட்டத்தட்ட டபுள் விலை! கொந்தளித்த நெட்டிசன்கள்

    ரயில்வே தேர்வு

    இந்த புகாரை தொடர்ந்து முஸ்கானின் கணவர் நிலேஷை பிடித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ஹோட்டலில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

    முஸ்கானின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது..!!!

    Advertisement

    உயிரிழந்த முஸ்கான், இன்று அதாவது அக்டோபர் 28-ம் தேதி நடைபெறும் ரயில்வே ஜூனியர் இன்ஜினியர் தேர்வுக்காக தயாராகி வந்தாராம்..

    English Summary

    Viral CCTV Video of Newlywed Woman.. What Happened at the Hotel Before Her Railway Exam?