விராட் கோலி, அனுஷ்கா சர்மா சொத்து முதலீடு.. ₹44.1 கோடிக்கு 3 வீடுகள், அங்கே தான் விஷயமே இருக்கு

  • சென்னை: விராட் கோலி, அனுஷ்கா சர்மா வாங்கும் ஒவ்வொரு சொத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே கவனம் பெறும்.. அந்த வகையில், மும்பையில் இப்போது இந்த நட்சத்திர குடும்பம் செய்துள்ள ₹44.1 கோடி முதலீடு சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், 3 வீடுகளும் ஒரே கட்டிடத்தின் 24-வது தளத்தில் அமைந்துள்ளன. யார் யார் எந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா?

    Advertisement

    மும்பையின் வெர்சோவா பகுதியில், யாரி சாலையில் அமைந்துள்ள கோத்ரெஜ் ஸ்கைஷோர் என்ற சொகுசுக் குடியிருப்பில்தான் இந்த வீடுகள் வாங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    அனுஷ்கா சர்மா வீடு

    அனுஷ்கா சர்மா ஒரு வீட்டைத் தனியாக வாங்கியிருக்கிறார். அவரது பெற்றோர் ஆஷிமா, அஜய் குமார் சர்மா ஆகியோர் அதற்கு அருகிலேயே இன்னொரு வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.. இதனை தவிர, அனுஷ்காவும் விராட் கோலியும் சேர்ந்து 3வது வீட்டை வாங்கியுள்ளனர். இந்த 3 வீடுகளின் மொத்த மதிப்பு சுமார் ₹44.1 கோடி..

    அனுஷ்கா சர்மா வாங்கிய வீட்டின் விலை மட்டும் 14.89 கோடி ரூபாயாகும்.. சுமார் 2,154 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டில், 3 கார்கள் நிறுத்தும் வசதியும் இருக்கிறது. இதற்காக அவர் சுமார் 74.48 லட்சம் ரூபாய் முத்திரைக் கட்டணம் செலுத்தியுள்ளார்.

    Advertisement

    அடுத்து, அவரது பெற்றோர் வாங்கிய வீட்டின் விலை 10.91 கோடி ரூபாயும்.. சுமார் 1,577 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டுக்கு 2 கார் பார்க்கிங் உள்ளன. இதற்கான முத்திரை கட்டணம் சுமார் ₹65.45 லட்சம். ஆக, அனுஷ்காவும் அவரது பெற்றோரும் வாங்கிய 2 வீடுகளின் மதிப்பு மட்டும் ₹25.8 கோடி. இந்த 2 வீடுகளின் மொத்தப் பரப்பளவு சுமார் 3,731 சதுர அடியாகும்.

    விராட் கோலியுடன் வாங்கிய 3வது வீடு

    இதற்கு பிறகு, அனுஷ்காவும் விராட் கோலியும் சேர்ந்து அதே கட்டிடத்தில் சுமார் 2,644 சதுர அடி கொண்ட இன்னொரு வீட்டை 18.29 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள்.. இந்த அக்ரிமெண்ட் ஒப்பந்தம் 2026 ஜூலை 21-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1.09 கோடி ரூபாய் முத்திரைக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த 3 வீடுகளும் ஒரே தளத்தில் இருப்பதுதான் மிகப்பெரிய ஸ்பெஷலாகும்.

    Advertisement

    இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருந்தாலும்,. இப்போதே இந்த வீடுகளுக்கு குடிபோக முடியாது. காரணம், கட்டிடம் இன்னும் கட்டுமானத்தில் இருக்கிறது... அனுஷ்கா மற்றும் அவரது பெற்றோர் வாங்கிய வீடுகள் 2031 ஜூன் 30-ம் தேதிக்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, வீட்டின் சாவி கிடைக்க இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்..

    விராட் தம்பதி - முதலீடு

    மும்பை வீடுகள் மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் ஜனவரியில் மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் உள்ள ஜிராத் கிராமத்தில் 5.19 ஏக்கர் நிலத்தை 37.86 கோடிக்கு அனுஷ்கா, விராட் தம்பதி வாங்கியுள்ளனர். இதற்காக 2.27 கோடி ரூபாய் முத்திரைக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதற்கு முன்பு 2022-ல் அலிபாக் பகுதியில் சுமார் 8 ஏக்கர் நிலத்தை ₹19.24 கோடிக்கு வாங்கியிருந்தனர். அங்கு 4 படுக்கையறைகள் கொண்ட காஸ்ட்லி பங்களாவை கட்டியிருக்கிறார்கள்.. விடுமுறையை கழிப்பதற்காகவே, இந்த பங்களா வீட்டை கட்டியிருக்கிறார்கள்.

    Advertisement

    அதேபோல, மும்பையின் வோர்லி பகுதியில் சுமார் ₹34 கோடி மதிப்பிலான சொகுசு வீடும், குருகிராமில் பாரம்பரிய வீடும் இவர்களுக்கு இருக்கிறதாம்.. .லண்டனின் நாட்டிங் ஹில் பகுதியிலும் தங்களது 2 குழந்தைகளுடன் அனுஷ்கா தம்பதி வசித்து வருகின்றனர். இப்படி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சொத்துகளை வைத்துள்ள இந்த நட்சத்திரத் தம்பதியின் புதிய மும்பை முதலீடு இப்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது..!!

    English Summary

    Virat Kohli Anushka Sharma Property Deal.. ₹44.1 Crore for 3 Luxury Flats, What’s the Big Surprise?