வெயிட்டிங் வன்னியரசுக்காக? தவெக அமைச்சரவை பதவிப் போட்டியில் விசிகவில் வெடிக்கும் உட்கட்சி மோதல்

  • சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக அங்கம் வகிக்குமா என்பது பெரும் விவாதமாகியுள்ளது.. திருமாவளவனே அமைச்சராக வேண்டுமா அல்லது வன்னியரசுவிற்கு வாய்ப்பளிக்கலாமா என்ற குழப்பத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் தவித்து வருகிறார்களாம்.- ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது குறித்து விசிக தலைமை எடுக்கும் முடிவே, அக்கட்சியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.. என்ன தான் நடக்கிறது களத்தில்?

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழலில், புதிய அரசு அமைந்திருக்கும் தருணத்தில், கூட்டணி தர்மம் மற்றும் அதிகாரப் பங்கீடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன..

    Advertisement

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடங்கியுள்ளது.. இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகள் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த முடியாமல் திணறி வருகின்றன.

    தவெக அமைச்சரவை

    ஒருபுறம் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான நீண்ட கால கோரிக்கை, மறுபுறம் திமுக உள்ளிட்ட அரசியல் சக்திகளின் அழுத்தம் என விசிக கட்சிக்குள் பல்வேறு கருத்து மோதல்கள் நிலவுகின்றன.. குறிப்பாக, கூட்டணி அரசியலில் திருமாவளவன் எடுத்து வரும் முடிவுகள், கட்சியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடியதாக அமையும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    Advertisement

    தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு திமுகவை விட்டு விலகி தவெக பக்கம் சாய்ந்த காங்கிரஸின் நிலை, மற்ற கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.. இத்தகைய சிக்கலான சூழலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு அரசின் நிலைத்தன்மையை எந்தளவுக்குப் பாதிக்கும், அல்லது விசிக போன்ற கட்சிகள் அதிகாரப் பகிர்வை ஏற்பது அவர்களின் அரசியல் அடையாளத்தை எவ்வாறு மாற்றும் என்பதுதான் இப்போது மாநிலத்தின் பேசுபொருளாக உள்ளது.

    திருமாவளவன் அமைச்சர் ஆகிறாரா

    இந்தத் தருணத்தில், அரசியல் கட்சிகளின் அணுகுமுறையில் இருக்கக்கூடிய குழப்பமான நிலைப்பாடுகள் மாநிலத்தின் எதிர்கால அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் சூழலை உருவாக்கியுள்ளன..

    தமிழகத்தின் இப்போதைய அரசியல் அதிகார மையத்தில் விசிக மிக முக்கியமான திருப்பத்தில் நிற்கிறது.. விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிக அங்கம் வகிக்குமா என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.

    Advertisement

    ஏனென்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் நீண்ட கால கோரிக்கை என்பதால், இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் முதல் மூத்த தலைவர்கள் வரை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

    திமுக கூட்டணி

    அதே சமயம், திமுக கூட்டணியில் நீண்ட காலமாக நீடிக்கும் விசிக, தவெக அரசுடன் கைகோர்ப்பது என்பது அரசியலில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.. திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை எதிர்கொண்ட விசிக மற்றும் பிற கட்சிகள், தற்போது தவெக உடன் இணக்கமாக செயல்படுவது விசிகவிற்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

    Advertisement

    திமுக கூட்டணியில் நீடிக்கும் விசிக, ஒருவேளை தவெக அமைச்சரவையில் அங்கம் வகித்தாலே அது அதிகாரப்பூர்வமாக கூட்டணியை விட்டு விலகியதற்குச் சமமாகவே பார்க்கப்படும்.. அதனால்தான், விசிகவிற்குள் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகள் தவெக அமைச்சரவையில் சேருவதை ஒருவித அச்சத்துடன் பார்க்கிறார்களாம்.

    வன்னியரசு - விசிகவுக்கு பதவி

    வன்னியரசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு கட்சிக்குள் எழுந்தாலும், அதற்குப் போதிய ஆதரவு இல்லை என்ற கருத்தும் கட்சியின் கீழ்மட்ட அளவில் முன்வைக்கப்படுகிறது.. இதனிடையே திருமாவளவன் அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளதாம்..

    இதற்காக திருச்சியில் இடைத்தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்து அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஆனால், தனது எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்பதும், அந்த இடம் திமுக தலைமைக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதும் தற்போதைய பெரிய குழப்பமாக உள்ளது..

    Advertisement

    அமைச்சரவையில் இடம் கிடைக்குமா அல்லது அதிகாரப் பகிர்வில் இழுபறி நீடிக்குமா என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விசிக தலைமை தவித்துக் கொண்டிருக்கிறதாம்.

    விஜய் முடிவு என்ன

    விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதேசமயம், தங்களுக்கு அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருவது, அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

    இடதுசாரிக் கட்சிகள் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், விசிக மட்டும் தனியாக அதிகாரத்தில் பங்கு கேட்டால் அது தோழமைக் கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள்.. இப்படி விசிக குறித்து எண்ணற்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து வரும் நிலையில், இதற்கெல்லாம் என்ன விடை கிடைக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Waiting for Vanniarasu? Internal strife erupts within VCK over tvk cabinet ministerial berth