ஜெம் வீரமணி வழக்கில் HD வீடியோவா வேணும்?.. ரகுபதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் சரமாரி கேள்வி

  • சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்துகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "வீடியோ கிளாரிட்டியாக இல்லை என்றால் HD வீடியோவாக வேண்டும். மனசாட்சி இருந்தால் இப்படிப் பேசலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாலியல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும், அந்த பென்டிரைவில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், சுமார் 80 வயது மதிக்கத்தக்க நபர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையில் கொடுத்ததாக காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை

    இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், அந்த வீடியோவில் இருந்தவர் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி என்பது தெரியவந்தது. தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவர்களை குடிவைத்துள்ளார்.

    சாந்தி மற்றும் மகேந்திரசிம்கன் தம்பதி மூலம் சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தொழிலதிபர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் அந்த சிறுமிகளை அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீரமணி, சாந்தி, மகேந்திரா சிம்கன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த சில புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

    Advertisement

    இதையடுத்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜெம் வீரமணியின் உதவியாளரான கணேசர் என்ற மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஹெச்டி வீடியோவா வேணும்

    இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவிடம் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசுகையில் வீடியோ கிளாரிட்டியாக இல்லை என்று கூறுகிறார். இந்த விவகாரத்தில் ஹெச்டி வீடியோவா கொடுக்க முடியும். மருந்தளவுக்கு மனசாட்சி இருந்தால் இப்படி பேசலமாமா. மனிதாபிமானத்துடன் இந்த விவகாரத்தைப் பேச வேண்டும். எவ்வளவு பெரிய வழக்கு இது.

    Advertisement

    இந்த வழக்கை மூடலாம், கைவிடாலம் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது யார். இதனை செய்ய உத்தரவிட்ட ஒரு தனிநபரா, அமைச்சரா, முன்னாள் முதல்வரா யார் உத்தரவிட்டது. அதிகார பலம் மிக்க, அரசியல் பலம் மிக்க நபர்கள் இதுபோன்ற வழக்குகளில் சிக்கும்போது பண கையாடல் செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்த சொல்லப்பட்டிருக்கிறது.

    விசாரணையை தடுத்தது யார்

    தவெக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் இத்தனை விசாரணைகள் செய்யப்படும்போது, ஒருவருடம் திமுக கையில் ஆட்சி இருந்தும் கூட இந்த விசாரணையை செய்யாதது ஏன். அதிகாரம் பலமிக்க, அரசியல் பலமிக்க அந்த நபர் மீது விசாரணை செய்யப்படாதது ஏன். விசாரணையைத் தடுத்தது யார். ஒரு வருட காலம் இந்த வழக்கில் அமைதியாக இருக்க சொல்லி உத்தரவிட்டது யார்.

    Advertisement

    பார்க்க பார்க்க இந்த வழக்கு கொடூரமாகவும், திகிலாகவும் உள்ளது. 8, 10 வயது குழந்தைகளை இந்த வழக்கில் வெளியில் வருகிறார்கள். இதைப் போன்ற விஷயங்கள் இனி நடக்கக் கூடாது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எந்த சார்புத் தன்மையும் இல்லாமல் எல்லோரையும் விசாரணை வளையத்தக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.

    முதல்வரின் தனி கண்காணிப்பு

    இதனை திசைதிருப்பும் வகையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டுள்ள போன ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் இன்னும் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். இந்த வழக்கை முடிக்க கூறியது யார், வழக்கை மந்தப்படுத்தியது யார். இந்த வழக்கின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் இந்த வழக்கை திசைதிருப்ப சொல்லி பின்னாடி இருந்து இயக்கக்கூடியது யார் என்று திமுகவினர் தான் வெளிப்படுத்த வேண்டும்.

    Advertisement

    இந்த வழக்கு முதல்வரின் தனி கண்காணிப்பில் உள்ளது. நிச்சயமாக யாரும் தப்பிக்க முடியாது. இந்த மண்ணில் வாழும் குழந்தை, பெண்களுக்கான அடிப்படை மனித உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

    English Summary

    Tamil Nadu School Education Minister Rajmohan criticised former minister Raghupathy over his remarks on the video evidence in the Gem Granites Veeramani POCSO case and questioned who ordered the earlier attempt to halt the investigation.