சென்னை: அமைச்சர் கீர்த்தனா அண்மையில் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வழிபட்டார். திருமலையில் அவர் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வந்த போது, அவர் கழுத்தில் அணிந்து இருந்த நகை எவ்வளவு, அவரது தேர்தல் பத்திரத்தில் குறிப்பிட்ட நகை அளவு எவ்வளவு என்று கூறி திமுகவினர் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்கள். சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். அந்த பதிவுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக நிர்வாகி ஒருவர் வெளியிட்ட பதிவினை டேக் செய்த அமைச்சர் கீர்த்தனா. பெண் என்பதால் இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
திமுக ஆதரவாளர் அரவிந்த் ராஜா என்பவர் வெளியிட்ட பதிவில், "தங்க மயிலாக ஜொலிக்கும் நம்ம விருதை மகள், தேர்தல் நேரத்தில குடுத்த அபிடேவிட்ல வெறும் 24கி தங்கம். அதாவது 3 பவுன் மட்டும் தான். ஆனா பாருங்க இந்த காசு மாலை மட்டுமே 10 பவுன் தேறும்.. தூய சக்தினா தூயசக்தி தான்" என்று விமர்சித்து இருந்தார். இதற்கு தவெக நிர்வாகிகள் பலர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். தங்கத்துக்கும் fashion jewelleryக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறார் என்று கடுமையான மொழியில் பதில் அளித்து வருகிறார்கள்.
இதற்கு பதில் அளித்த பிரியா என்ற தவெக நிர்வாகி, இவர்கள் கவரிங் நகைகளை தங்க நகைன்னு உருண்டுட்டு பிராண்டிட்டு இருக்காங்க. அடிப்படை அறிவு சிறுதும் இல்லாத இவங்க தான் அடுத்தவங்களை தற்குறின்னு பேசிட்டு இருக்கானுங்க. இந்தாங்கடா அந்த கவரிங் நகைக்கடையே வீடியோ போட்ருக்காங்க. பார்த்துட்டு போயி தொங்கிடாதீங்க ஒரு பெண் சுயமா தன்னுடைய உழைப்பால் இந்த வயதில் அமைச்சரா இருந்து இந்த மக்களுக்காக வேலை பார்த்துட்டு இருந்தா இவனுங்க அவங்கள பத்தியே பேசி அவதூறு பரப்புறதையே முழு நேர வேலையா பார்த்துட்டு இருக்கானுங்க. எவ்வளவு அவதூறு பரப்பினாலும் ஒண்ணும் கிழிக்க முடியாது இந்த பதிவினை டேக் செய்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "நான் ஒரு சாதாரணப் பெண்... அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள்! இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்! ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்... தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை! என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. விமர்சியுங்கள்... ஆராயுங்கள்... சோதித்துப் பாருங்கள்! என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது!" இவ்வாறு கூறியுள்ளார்.
இவனுங்களை நாங்க பார்த்துக்குறோம். முதல்வர் விஜய் அண்ணா உங்க கிட்ட பெரிய பொறுப்பு கொடுத்திருக்கார். நீங்க அதை பாருங்க மேம்." என்று கூறியிருந்தார்.