எண்ணூர் டூ மகாபலிபுரம் வரை.. சென்னைக்கு வரும் வாட்டர் மெட்ரோ.. டெண்டர் கோரிய மெட்ரோ நிறுவனம்!

  • சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயரிக்க சென்னை மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை நீர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், விருப்பம் உள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையில் போக்குவரத்து திட்டத்திற்காக தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பேருந்து, ரயில், மெட்ரோ, விமான நிலையம் என்று பல்வேரு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, அது தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் அடுத்தக் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்களும் முடிவடைந்து திறந்து வைக்கப்பட உள்ளன.

    Advertisement

    2ஆம் கட்ட மெட்ரோல் ரயில் திட்டங்கள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது அடுத்தக் கட்டமாக சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு அறிக்கை மற்றும் விரிவாக அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டெண்டரில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக இந்த சேவை திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான 53 கிமீ தூரத்திற்கு அதிக நவீன படகு போக்குவரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்தியாவில் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம் கேரளாவில் கொச்சியில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னையிலும் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி விருப்பம் உள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 18ஆம் தேதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Water Metro: CMRL Floats Tender for Feasibility Report on Buckingham Canal Water Metro Project