காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு.. வினாடிக்கு 3000 கனஅடி நீர் வெளியேற்றம்

  • சென்னை: காவிரி டெல்டா படுகை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுள்ள நிலையில், முக்கொம்பு அணையை தாண்டிய காவிரி நீர், நேற்று மாலை கல்லணையை எட்டியது.

    Advertisement

    இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்காக இன்று காலை கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் வினோத், ஷாஜஹான் ஆகியோர் கல்லணையில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தனர். காவிரி நீருக்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

    Advertisement

    மேட்டூர் அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி நீர் திறந்தாலும் வழிநெடுக நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் கல்லணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கன அடி நீரும், வெண்ணாற்றில் வினாடிக்கு ஆயிரம் கன அடி நீரும், கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி நீரும், கொள்ளிட்டத்தில் வினாடிக்கு 500 அடி கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது

    நீர் திறப்பு மூலம் சுமார் 3,12,788 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 3,12,788 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். பாசனத்திற்காக மட்டுமின்றி குடிநீருக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடைமடை வரை செல்லும் வகையில், வாய்க்கால்கள், ஆறுகள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு, பருவமழை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    English Summary

    Water has been released from Kallanai for irrigation in the Cauvery Delta region. The Mettur Dam was opened on the 1st of the month. While 7,000 cubic feet of water per second is being released from the Mettur Dam, the Cauvery water—having passed the Mukkombu Dam—reached Kallanai yesterday evening.