தவெக ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை.. திருமாவளவன் பேச்சு

  • சென்னை: தவெக ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லைதான். ஏனென்றால் நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம். எப்படி மகிழ்ச்சியடைய முடியும்.. ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த பிள்ளை என தவெகவை விமர்சித்து இருக்கிறோம்.. இப்போது ஆட்சியில் பங்கு என்றதும் கட்டிப்பிடித்து உருள முடியுமா என விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார்.

    Advertisement

    சென்னை காமராஜர் அரங்கில் விசிக விருது வழங்கும் விழா நடந்தது. அப்போது திருமாவளவன் பேசியதாவது:-

    Advertisement

    எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை

    தோழர் வீரபாண்டியன் சொன்னதை போல தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று இருக்கிறது, வந்து இருக்கிறது என்றால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை தான்.. ஏனென்றால் நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம். எப்படி மகிழ்ச்சியடைய முடியும். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் தவெகவை விமர்சித்து இருக்கிறோம். எப்படி பதவிக்காக நாம் ஒட்டிக்கொள்ள முடியும். எப்படி பதவிக்காக கட்டிப்புரண்டு உருள முடியும்.

    ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த பிள்ளை என சொல்லி விமர்சித்துவிட்டு, இல்லை இல்லை உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் எனக்கு துணை முதல்வர் பதவி தாருங்கள் என்றா பேசினோம்.. கெஞ்சினோம்.. அதற்காக காத்திருந்தோமா.. இல்லை.. நாங்கள் அப்படி பேசியது எங்களுக்கு இருந்த சந்தேகம்.. முதல்வர் விஜய் நினைத்திருந்தால் அதிமுகவினுடைய ஆதரவினை பெற்று ஆட்சி அமைத்திருக்க முடியும். அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்க முடியும்.

    Advertisement

    விஜய் எடுத்த முடிவு வியப்பை கொடுத்தது

    ஆனால் இதையெல்லாம் தவிர்த்து நீங்க எடுத்து இருக்கின்ற முடிவு எங்களுக்கு வியப்பை கொடுத்தது. மதசார்பற்ற சக்திகளாக, களத்தில் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள எங்களைப் போன்றவர்களை அழைத்து ஆதரவை கேட்டது துணிச்சலான முடிவு. எனவே நீங்க எடுத்து இருக்கும் நிலைப்பாட்டை நாங்கள் அங்கீகரிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.. மதச்சார்பின்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது எங்களுக்கு வெளிப்பட்டு இருந்தது. அது தேர்தலுக்கு முன்பு இருந்த சந்தேகம்.

    5 ஆண்டுகள் ஆட்சி தொடரும்

    தேர்தலுக்கு பிறகு நீங்கள் எடுத்த நிலைப்பாடு எங்களுக்கு அந்த சந்தேகத்தை போக்கியிருக்கிறது. எனவே நாங்க ஆதரவு நல்குகிறோம். உறுதியாக இருப்போம். என்றைக்கும் தோழமைக்கு உண்மையாக இருப்போம். 5 ஆண்டுகள் வரை உங்கள் ஆட்சி தொடரும். அதற்கு நாங்கள் துணை இருப்போம் என சொல்லியிருக்கிறோம். இதில் என்ன துரோகம் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள், நீங்கள் திமுகவில் இருக்கிறீர்களா என்று..

    Advertisement

    திமுக கூட்டணியில் விசிக இருக்கிறதா?

    திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என திமுக தலைமை அறிவித்து விட்டது. நான் அறிவிக்கவில்லை. இதுவரை நான் இன்னும் அறிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் விசிக இல்லை என நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கின்றோம் என்றும் நாங்க அறிவிக்கவில்லை. அமைச்சரவையில் இருக்கிறோம். கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை கடந்த 1 ஆம் தேதி நடந்ததில் பங்கேற்றோம். ஆனால் இன்னும் அதில் ஒரு முடிவும் எடுக்கவில்லை.

    அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அதில் இடம்பெறுவோம். அதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. இதை ஏன் இப்போது நான் சொல்கிறேன் என்றால், திமுக தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி விசிகவில் உள்ள ஒருவரை அழைத்து கட்சியில் இணைத்தபோதே திமுக தலைமையே சொல்கிறது விசிகவுடன் எங்களுக்கு உறவு இல்லை என்று. நானா சொன்னேன்.. விசிகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பை சொல்லியது யார்.. முன்னாள் முதல்வர் அண்ணன் மு.க ஸ்டாலின் தான். எனது மதிப்பிற்குரியவர்.

    Advertisement

    மு.க ஸ்டாலின் சொன்னாரா இல்லையா?

    அவர் மீதான மதிப்பு என்றைக்கும் குறையாது.. அது வேறு.. பாஜக தலைவர்களுக்கே உரிய மரியாதை கொடுப்பவன் திருமாவளவன். அக்கா தமிழிசையை எங்கு பார்த்தாலும் ஓடிச்சென்று கை கொடுப்பவன் நான்.. அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை பார்த்தாலும் பேசுபவன். அன்புமணியை விமான நிலையத்தில் பார்த்தாலும் ஓடிப்போய் அவரிடம் பேசுவேன்.. இது என்னுடைய பண்பு. என் ரத்தத்தில் ஊறிய பண்பு. இதை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது.

    முன்னாள் முதல்வர் அண்ணன் மு.க ஸ்டாலின் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே உள்ள அரசியல் உறவை இல்லை என அறிவித்து இருக்கிறாரா? இந்த முடிவை அவர் எடுத்தாரா? நான் எடுத்தேனா? என் தம்பிகளுக்காக நான் இதனை முன் வைக்கின்றேன். யார் மீதும் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அரசியல் என்பது முற்றிலும் வேறு. தனிநபர் உறவு என்பது வேறு. எல்லாத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Thirumavalavan: Speaking at a VCK awards function, Thirumavalavan said the party was not happy about TVK coming to power because VCK had contested the election as part of the DMK-led alliance. He added that it would be unrealistic to expect the party to celebrate the victory of its electoral opponent.