3-4 கார் இருக்கு.. ஆனா! முதல்வர் கொடுக்குற கார்ல போகுறதுதான் கெத்து! - மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ்

  • சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. "என்னிடம் 3-4 கார்கள் இருக்கின்றன. இருந்தாலும்.. முதல்வர் கொடுக்குற கார்ல போகுறதுதான் கெத்து என்று மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் கூறியிருக்கிறார்.

    Advertisement

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வேண்டும், தொகுதிக்குள் சென்று பார்க்க சிரமமாக இருக்கிறது என்று எம்எல்ஏக்கள் சிலர் பேசியிருந்தனர். இதுதான் கடந்த ஒரு வாரமாக சட்டமன்றத்தில் ஹாட் டாப்பிக்.

    Advertisement

    இந்நிலையில் மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் சட்டமன்றத்திலேயே தனக்கு கார் இருக்கிறது என்று பேசியிருக்கிறது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசியதாவது, "நிறைபேருகிட்ட கார் இருக்கு. ஆனால், நம்முடைய அரசு கார், முதல்வர் கொடுக்கிற காரில் செல்கிறோம் என்பதுதான் பெருமை. அந்த காரில் நாளையே நான் தொகுதிக்கு செல்வேன்.

    என்னிடமும் 3-4 கார்கள் இருக்கு. ஆனாலும், தமிழ்நாடு முதல்வர் கொடுத்திருக்கும் காரில் தொகுதியை சுற்றி வருகிறபோது.. அதில் இருக்கிற ஒரு கெத்து.. அந்த எம்எல்ஏ என்கிற கெத்து" என பேசியிருக்கிறார்.

    முன்னதாக ஆளும் கட்சியை சேர்ந்த பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன், "சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் தந்திருக்கும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கல்லூரி படிக்கும்போது.. காதல் தோல்வி! வேலையும் இல்லை.. காரும் இல்லை. இன்று வேலையும் கொடுத்திருக்கிறார். காரையும் கொடுத்திருக்கிறார் தலைவர். இதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ரயிலில்தான் ஊரிலிருந்து வருகிறேன். சட்டமன்றத்திற்குள் ஆட்டோவில் வரும்போதெல்லாம் காவலர் பணியாளர்கள் கேட்பார்கள். நான் எம்எல்ஏ என்று சொல்லி ஐடி கார்டை எடுத்து காட்டினாலும் நம்ப மாட்டார்கள். எனவே கார் வழங்கிய முதல்வருக்கு நன்றி" என்று பேசியிருந்தார்.

    Advertisement

    அதேபோல மொடக்குறிச்சி தவெக எம்எல்எ சண்முகன், "கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகிறார்கள்" என்று பேசினார்.

    ஆனால், இப்படி கார் கேட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு ஏற்கெனவே கார் இருந்தது என்பதுதான் ஹைலைட். தேர்தல் பத்திரத்தில் தங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் குறித்து இவர்கள் விவரங்களை கொடுத்திருந்திருந்தனர். இந்த விவரங்களை சரிபார்த்தபோது.. தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரனுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கார் இருப்பதும், மற்றொரு எம்எல்ஏ சண்முகத்துக்கு பென்ஸ் கார் ஒன்னுக்கு ரெண்டு இருப்பதும் தெரிய வந்தது.

    இதெல்லாம் தேர்தல் பத்திரத்தின் விவரம். ஆனால், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தனக்கு கார் இருக்கிறது என்பதை சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    English Summary

    Mannargudi MLA Kamaraj: The announcement regarding the provision of cars to Members of the Legislative Assembly (MLAs) has sparked a major debate. Mannargudi MLA Kamaraj remarked, "I already own three or four cars; however, there is a certain prestige in traveling in the car provided by the Chief Minister."