SIR-யை நாங்களும் எதிர்க்கிறோம்.. கடைசியில் வண்டியில் ஏறிய தவெக.. ராகுல் கைதுக்கும் எதிர்ப்பு

  • சென்னை: ''தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தவெக கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள், எம்பிக்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்'' என்று முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    'SIR' சர்ச்சையில் இந்திய தலைமை தேர்தல் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி 'இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்கள் டெல்லியில் இன்று 2வது நாளாக போராட்டம் நடத்தினர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவில் தான் தவெக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதனால் SIR விவகாரம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் போராட்டம் பற்றி பேசாமல் தவெக அமைதி காத்து வந்தது.

    இது விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது.

    Advertisement
    சாலையில் படுத்த பிரியங்கா காந்தி.. ராகுல் தலைமையில் டெல்லியை திணறடித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது

    SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான சர்ச்சை கிளம்பிய பிறகு காங்கிரஸ் கட்சி பல முறை போராட்டங்களை நடத்தி உள்ளது. ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று கூட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போதும் விஜய்யின் தவெக கண்டனம் தெரிவிக்காமல் இருந்தது.

    Advertisement
    பெண் போலீசை தொடக்கூடாத இடத்தில் தொட்ட ராகுல் காந்தி? பாஜக வெளியிட்ட வீடியோ

    இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? தலைவர்கள் இடையே அதிருப்தி நிலைவுகிறதா? என்று பல்வேறு கேள்விகள் எழ தொடங்கிய நிலையில் இன்று திடீரென்று ராகுல் காந்தியின் கைதை தவெக கண்டித்துள்ளது ஓரளவு இருகட்சியினருக்கும் இடையே நிம்மதியை கொடுத்துள்ளது.

    ஏனென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு இல்லாவிட்டால் தவெக ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். அதேபோல் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தல் முதல் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் வெல்ல வேண்டும் என்றால் தவெகவில் ஆதரவு வேண்டும். இப்படி இருக்கும்போது இருகட்சியினருக்கும் இடையே குழப்பம் உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் இந்த கண்டனம் தெரிவிப்பு இருகட்சியினருக்கும் நிம்மதியை அளித்துள்ளது.

    English Summary

    TVK Says, "TVK opposed the SIR procedure even before coming to power, and it maintains the same stance today. Tamizhaga Vettri Kazhagam condemns the arrest of leaders and MPs—including the Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi—who staged a protest in Delhi against the SIR procedures’’.