'எல் நினோ' தாக்கம்.. வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு!

  • சென்னை: 'எல் நினோ' எனப்படும் வானிலை மாற்றம், அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழுவை அமைத்திருக்கிறது. இந்த குழுவில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் இடம் பெற்றிருக்கின்றனர்.

    Advertisement

    இந்த ஆண்டு 'எல் நினோ' தாக்கம் காரணமாக போதுமான அளவுக்கு தமிழ்நாடு மழையை பெறவில்லை. கேரளா, கர்நாடகாவிலும் மழை இல்லாததால், காவிரியில் நீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத வறட்சியை எதிர்கொண்டிருக்கிறது. இப்படியான பாதிப்புகளை ஆய்வு செய்து, அறிக்கையாக இக்குழு அரசுக்கு சமர்ப்பிக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    Advertisement

    எல் நினோ என்றால் என்ன?

    பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம்தான் 'எல் நினோ' எனப்படுகிறது. ஆயிரக்கணக்கான கி.மீ-க்கு அப்பால் இந்த மாற்றம் ஏற்பட்டாலும், அது இந்தியாவில் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுதும். அந்த வகையில் இந்த ஆண்டு 'எல் நினோ' பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.

    தென் மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். இதன் காரணமாக, காவிரியில் போதுமான அளவுக்கு தண்ணீர் ஓடும். கர்நாடக அணைகள் முழு கொள்ளவை எட்டும்போது அவை திறக்கப்பட்டு.. தமிழகத்தின் மேட்டூருக்கு தண்ணீர் வரும். இதனால், டெல்டா மாவட்டங்கள் பயன் பெறும். இப்படியாக செயின் ரியக்ஷன் நடக்கும். ஆனால், மழை பெய்யாததால் இந்த முறை கர்நாடகா தண்ணீரை திறக்கவில்லை. எனவே டெல்டா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    பிரச்சனை இதோடு முடியாது. கடந்த காலங்களில் எல் நினோ சமயத்தில், வட கிழக்கு பருவமழை ரொம்பவும் தீவிரமாக இருந்தது. இதனால் வட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. எனவே இந்த பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால்.. பாதிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

    தற்போது அதற்கான பணிகளைதான் தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. எல் நினோ பாதிப்புகளை கண்டறிய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் மொத்தம் 7 பேர் இடம் பெற்றிருக்கின்றனர்.

    English Summary

    Weatherman Pradeep John: The Tamil Nadu government has constituted a committee to study the weather phenomenon known as 'El Niño' and its potential impact. The committee comprises seven members, including 'Tamil Nadu Weatherman' Pradeep John.