59 ஆயிரம் மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கல்வி உதவித்தொகை குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

  • சென்னை: பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை ஆதிதிராவிட மாணவர்களுக்கு இணையான தொகையாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 31 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. 'போஸ்ட் மெட்ரிக்' எனும் 11-ம் வகுப்பு முதல் உயர் கல்வி, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் 35 ஆயிரத்து 78 பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை வேறுபாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், "பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஆதிதிராவிட மாணவர்களுடன் ஒப்பிடும்போது, பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்த அளவே உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

    Advertisement

    ஒரே கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களிடையே உள்ள இந்த ஏற்றத்தாழ்வு களையப்படும் என சமூக நீதித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

    அதாவது, ஆதிதிராவிட மாணவர்களுக்கு இணையான பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கும் வகையில், 'பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம்' அறிமுகப்படுத்தப்படும் என்றும், இதற்கான கூடுதல் செலவினத்தை மாநில அரசே முழுமையாக ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பழங்குடியின மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் தொழிலும்முறை படிப்புகளில் அதிகளவில் சேர சம வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    அதன்படி, 'போஸ்ட் மெட்ரிக்' எனும் 11-ம் வகுப்பு முதல் உயர் கல்வி, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் 35 ஆயிரத்து 78 பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை வேறுபாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கல்வி உதவித்தொகை கிடைத்துவிட்டது.. நெஞ்சார்ந்த நன்றி.. வீடியோ வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்!

    'பிரி மெட்ரிக்' எனும் 10-ம் வகுப்புக்கு முந்தைய கல்வியை பயின்று வரும் விடுதியில் தங்காத 24 ஆயிரத்து 417 பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.1 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    மருத்துவக்கல்வி படிக்கும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வழங்கி வருகிறது.

    இவர்களுக்கு கூடுதலாக மருத்துவ கட்டணம் ரூ.55 லட்சத்து 20 ஆயிரம் தேவைப்பட்டதால் இதற்கும் அனுமதித்து மொத்தமாக ரூ.4 கோடியே 31 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Increase in educational scholarships for tribal students in tamil nadu: 59,000 individuals will benefit from the increase in educational scholarships for tribal students.