சென்னை: தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் பயனடைய என்னென்ன தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழர் மரபில் திருமணத்தின் போது அண்ணன் வழங்கும் 'சீா்' என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணங்களில் மணப்பெண்களுக்கு அரசு, அண்ணனாக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எப்போதும் அக்கொண்டு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தும் விதமாக, புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மணப்பெண்களுக்கு அன்புப் பரிசாக எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் தொலைநோக்கு ஆவணத்தின் ஒரு திட்டமாகும். தமிழ்நாட்டில் ரூ.2.5 இலட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கும் "அண்ணன் சீர்" திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையாக நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடிக்கு (ரூபாய் எண்ணூற்று பன்னிரண்டு கோடி மட்டும்) நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த, தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும். இத்திட்டம் அரசாணை வெளியிடப்பட்ட அக்டோபர் 5 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு நடக்கும் முதல் நடக்கும் திருமணங்களுக்கு பொருந்தும். இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பா்க வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள ஒருவர் ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்பட வேண்டும். ஆதார் எண் இல்லாத அல்லது இதுவரை ஆதாருக்கு பதிவு செய்யாத தகுதியுள்ள பெண், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். UIDAI இணையதளம் http://www.uidai.gov.in -ல் உள்ள பட்டியலில் இருந்து அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தை அணுகலாம். மாற்று ஆவணங்கள் - ஆதார் ஒதுக்கப்படும் வரை, கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம்: புகைப்படத்துடன் கூடிய வங்கி / தபால் நிலைய பாஸ்புக் பயோமெட்ரிக் தோல்விக்கான தீர்வு: கைரேகை தரம் குறைவாக இருந்தால், கருவிழி ஸ்கேன் (Iris Scan) அல்லது முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் அங்கீகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில்தான் தாய்மாமன் தங்க மோதிர திட்டம், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டவை தொடங்கி வைக்கப்பட்டது. இவையெல்லாம் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளாகும்.அண்ணன் கிட்ட உதவி கேட்ட தங்கை.. மறு நிமிடமே குளச்சல் லாட்ஜில் திருப்பம்.. கதிகலங்கிய கன்னியாகுமரி
(a) ஆதார் பதிவு செய்திருந்தால், அதற்கான Enrolment Slip; அல்லது
(b) பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று
பான் அட்டை
பாஸ்போர்ட்
ரேஷன் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை
விவசாயிகளுக்கான மத்திய , மாநில அரசுகலின் அடையாள அட்டை (Kisan Photo Passbook)
ஓட்டுநர் உரிமம்
Gazetted Officer / Tahsildar வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்
அரசு புகைப்பட அடையாள அட்டை
துறையால் குறிப்பிடப்படும் வேறு ஆவணங்கள்தாய் மாமன் சீர், அண்ணன் சீர்லாம் வேண்டாம்.. பெண்கள் யார் கையையும் எதிர்பார்க்கக் கூடாது! கனிமொழி